- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் பற்றி எல்லாம் என்னிடம் கேள்வி கேட்காதீங்க, எனக்கும் அந்த ஆசை இருக்கு - பிரபல...

விஜய் பற்றி எல்லாம் என்னிடம் கேள்வி கேட்காதீங்க, எனக்கும் அந்த ஆசை இருக்கு – பிரபல காமெடி நடிகர் செந்தில் இப்படி சொல்லிட்டாரே?

- Advertisement -

நடிகர் செந்தில், தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருப்பவர். 1980,90களில் கவுண்டமணி செந்தில் காமெடி என்பது தமிழ் சினிமாவில் கோலோச்சிய காலகட்டமாக இருந்தது. ஹீரோ, ஹீரோயினை காட்டிலும் கவுண்டமணி செந்தில் இருந்தால், அந்த படத்துக்கு வரும் ரசிகர் கூட்டம் அதிகமாக இருந்தது.

அதிலும் குறிப்பாக நடிகர் ராமராஜனின் படங்களில் கவுண்டமணி செந்தில் கூட்டணி பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இன்றும் அவர்களது கரகாட்டக்காரன் படத்தின் காமெடி காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சிரிக்க வைக்கிறது. வாழைப்பழ காமெடி இன்னும் ரசிக்க வைக்கிறது.

- Advertisement -

வைதேகி காத்திருந்தாள், உதயகீதம், சின்னக்கவுண்டர், எங்க ஊரு பூவாத்தா, சொக்கத்தங்கம், தங்கமான ராசா, நீங்களும் ஹீரோதான், ஊருவிட்டு ஊரு வந்து என பல நூற்றுக்கணக்கான படங்களில் அவர்களது காமெடி சிரிக்க வைக்கும். கவுண்டமணி செந்தில் காமெடியை ரசிப்பதற்கு என்றே தனியாக ரசிகர்கள் கூட்டம் இன்று இருக்கிறது.

கவுண்டமணியிடம் செந்தில் காமெடி கூட்டணியில் வெளியான பல படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு இருவரும் தனியாக காமெடி செய்த நிலையில், கவுண்டமணிக்கு பழைய வரவேற்பு கிடைத்தது. ஆனால் செந்தில் காமெடி எடுபடவில்லை. பிறகு மீண்டும் இருவரும் ஒன்றாகவே நடிக்க ஆரம்பித்து விட்டனர்.

- Advertisement -

ஆனால் கடந்த பல ஆண்டுகளாக முதுமை காரணமாக கவுண்டமணி நடிப்பதை வெகுவாக குறைத்துக்கொண்டார். செந்திலும் அவ்வப்போது சில படங்களில் மட்டுமே நடிக்கிறார். சமீபத்தில் கோவில் ஒன்றில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்க வந்த நடிகர் செந்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம், நடிகர் விஜய் தவெக கட்சி குறித்து கேட்டதற்கு, அந்த கேள்விகளை எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள், என்று பதிலளிக்க மறுத்துவிட்டார். பிறகு மீண்டும் கவுண்டமணியுடன் சேர்ந்து நடிப்பீர்களா என்று செந்திலிடம் கேட்ட போது, அந்த வாய்ப்பு கிடைத்தால் விடுவேனா, வேண்டாம் என்று சொல்வேனா, நிச்சயம் கவுண்டமணியுடன் நடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்கும் ஆசை எனக்கும் இருக்கிறது, என்று நடிகர் செந்தில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்