- Advertisement -
Homeபொழுதுபோக்குவழக்கமா இந்த ஏரியாவுக்குள்ள அவர்தானே அடிக்கடி வருவார் - பிரபல நடிகரை பார்த்து ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்

வழக்கமா இந்த ஏரியாவுக்குள்ள அவர்தானே அடிக்கடி வருவார் – பிரபல நடிகரை பார்த்து ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்

- Advertisement -

நடிகர்களில் ஒரு சிலருக்கு ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டு, போலீஸ் கோர்ட் என்று அலைவது வழக்கம். சினிமாவில் போலீஸ் ஸ்டேஷன்களில் புகுந்து, அதிகாரிகளை கேள்வி கேட்டு அடித்து நொறுக்கும் ஹீரோக்கள், நிஜ வாழ்வில் போலீஸ், கோர்ட் என்றால் சற்று கலக்கமடைந்து விடுகின்றனர் என்பதுதான் உண்மை.

அந்த வகையில், நடிகர் விஷால் தன்னுடைய பெயரில் விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். அதில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில், மற்ற சில தயாரிப்பு நிறுவனங்களுடன் ஏற்பட்ட பிரச்னைகளால், அடிக்கடி கோர்ட்டுக்கு வந்து செல்வது வழக்கமாக இருக்கிறது. சமீபத்தில் கூட, தன்னுடைய சொத்து கணக்கை அவர், கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் அவருடன் மார்க் ஆண்டனி படத்தில் வில்லனாக நடித்த எஸ்ஜே சூர்யாவும் இன்று கோர்ட்டுக்கு வந்து இருக்கிறார். விஷால் உடன் நடித்த உடனே, இவரும் கோர்ட்டுக்கு வந்துவிட்டாரே என, இதையறிந்த ரசிகர்கள் பலரும் திகைத்து போயினர். ஆனால், இவரும் சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பிரச்னைகளில் கோர்ட்டுக்கு வந்து சென்றவர்தான்.

கடந்த 1999ம் ஆண்டில், அஜீத் குமார் நடித்த வாலி படம் வெளிவந்தது. இந்த படத்தை இயக்கியவர், இன்றைய நடிகரான எஸ்.ஜே சூர்யா தான். இந்த படத்தின் இந்தி உரிமை, தயாரிப்பாளர் போனிகபூருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்ஜே சூர்யா வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த படத்தின் கதையை எழுதியவருக்கே சொந்தம் என்பதற்கான எந்த ஆவணத்தையும், இயக்குநர் எஸ்ஜே சூர்யா தரப்பில் எந்த ஒரு ஆவணத்தையும் தாக்கல் செய்யவில்லை. அதனால் படத்தின் காப்புரிமை தயாரிப்பாளருக்குதான் சொந்தம் என்று கூறி, இப்படத்தின் ரீமேக் பணியை துவங்க, இடைக்கால அனுமதியை ஏற்கனவே, உயர்நீதிமன்றம் வழங்கி இருந்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு குறித்த வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக, சென்னை உயர்நீதிமன்றத்தில், நடிகர் எஸ்ஜே சூர்யா இன்று நேரில் ஆஜரானார். வாக்குமூலங்களை பதிவு செய்யும் நீதிமன்றத்தில், நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோபரிடம் சாட்சியம் அளித்தார். இது கோர்ட் வளாகத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. வரும் திங்கட்கிழமை, இந்த வழக்கு விசாரணை நடக்க உள்ளது.

சற்று முன்