- Advertisement -
Homeபொழுதுபோக்குலோகேஷ் கனகராஜ் பார்த்த வேலையால், வெங்கட்பிரபு எடுத்த அதிரடி முடிவு - கோட் படத்தில் நட்சத்திர...

லோகேஷ் கனகராஜ் பார்த்த வேலையால், வெங்கட்பிரபு எடுத்த அதிரடி முடிவு – கோட் படத்தில் நட்சத்திர கூட்டம் அதிகரிக்க இதுதான் காரணமா? – ரொம்ப அசிங்கமா போச்சு குமாரு!

- Advertisement -

இயக்குனர் வெங்கட்பிரபு, இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன். இளையராஜா பெரியப்பா என்ற நிலையில், இசைக்குடும்பம் சார்ந்த பின்னணி இருந்ததால், சினிமாவில் துவக்கத்தில் நடிப்பில் ஆர்வம் காட்டினார். ஏப்ரல் மாதத்தில், உன்னை சரணடைந்தேன், சிவகாசி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால் பெரிய அளவில் அவரது நடிப்பு எடுபடவில்லை.

அதன்பிறகு, தனது நண்பர்கள் குழுவுடன் இணைந்து சென்னை 28 படத்தை இயக்கினார். பெரிய அளவில் படம் ஹிட் ஆனது. அதனால் தொடர்ந்து இயக்குனராக தனது பயணத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு கோவா, சரோஜா, மங்காத்தா, மாநாடு, கஸ்டடி என தனது பயணத்தை தொடர்ந்தார். ஹிட் படங்களாக கொடுத்து, முன்னணி இயக்குனராக மாறினார்.

- Advertisement -

இதையடுத்து, விஜய் நடிப்பில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். டைம் டிராவல் கதையை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில், நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரசாந்த் நடித்திருக்கிறார். பிரபுதேவா, மைக் மோகன், சுதீப், வைபவ், அஜ்மல் போன்றோரும் நடித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி சினேகா, ரம்யா கிருஷ்ணன், மீனாட்சி சவுத்ரி, லைலா, கனிகா, விடிவி கணேஷ், யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஏஐ தொழில் நுட்பத்தில் விஜயகாந்த், காமெடி நடிகர் விவேக் வருகின்றனர். அத்துடன் கிளைமேக்ஸில் கேமியோ ரோலில் சிவகார்த்திகேயனும் நடித்திருக்கிறார்.

- Advertisement -

விஜய் என்கிற மிகப்பெரிய மாஸ் ஹீரோ நடித்துள்ள இந்த படத்தில் எதற்காக இத்தனை நட்சத்திர நடிகர்களை வெங்கட்பிரபு களத்தில் இறக்கி இருக்கிறார் என்பதற்கான காரணம் இப்போது தெரிய வந்துள்ளது. அதாவது, கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான லியோ, மிகப்பெரிய சொதப்பலான படமாக அமைந்தது. ரசிகர்கள் விரும்பும்படியான படமாக லியோவை, லோகேஷ் கனகராஜ் தரவில்லை.

அதனால் விஜய் ரசிகர்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டது. பொதுவான சினிமா ரசிகர்கள், லியோவை போன்ற ஒரு மிக மோசமான படம் கிடையாது. சுறா, குருவி, வில்லு படங்களையே மிஞ்சி விட்டது என்று விமர்சித்தனர். வெங்கட்பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த கஸ்டடி படம் சரியாக போகவில்லை. அதனால் விஜயை மட்டுமே நம்பினால் வியாபாரம் ஆகாது, படம் ஹிட் ஆகாது என்ற பயம் காரணமாகவே, இத்தனை நட்சத்திர நடிகர்களை கோட் படத்தில் வெங்கட் பிரபு களத்தில் இறக்கிய தெரிய வந்துள்ளது. கடைசியாக சிவகார்த்திகேயனும் கேமியோ ரோலில் வரும்படி செய்துவிட்டார்.

- Advertisement -

சற்று முன்