- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படத்தை பார்க்காமல் கிடப்பில் போட்ட ரீவைசிங் கமிட்டி - 18 நாட்கள் விதிமுறை...

ஜனநாயகன் படத்தை பார்க்காமல் கிடப்பில் போட்ட ரீவைசிங் கமிட்டி – 18 நாட்கள் விதிமுறை என்னங்க ஆச்சு? – அப்செட் ஆன தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக நடிகர் விஜய் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். வருகிற சட்டசபை தேர்தலில் தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டியே என்றும் சூளுரைத்து வருகிறார். எந்த பெரிய கட்சியும் கூட்டணி சேராத நிலையில் தனித்து களம் காண்போம் வெற்றி பெறுவோம் என்று பேசி வருகிறார்.

இதற்கிடையே நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் சென்சார் பிரச்னை காரணமாக அந்த படம் ரிலீஸ் குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆகவில்லை. இது தளபதி ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது.

- Advertisement -

ஏனெனில் இது தளபதியின் கடைசி படம் என்பதாலும் இதில் அரசியல் காட்சிகள் அரசியல் வசனங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டதால் பெரிய எதிர்பார்ப்பில் இந்த படத்தை தளபதி ரசிகர்களும் டிவிகே கட்சியினரும் கொண்டாட காத்திருந்தனர். இதுகுறித்து கோர்ட்டுக்கு சென்றும் எதிர்பார்த்த பலன் இல்லாததால் வழக்கும் வாபஸ் பெறப்பட்டு விட்டது.

இந்நிலையில் தற்போது ரீவைசிங் கமிட்டி ஜனநாயகன் படத்தை பார்த்துவிட்டு அனுமதி தந்தால் படம் ரிலீஸ் ஆகும். இதற்காக கடந்த பிப்ரவரி 5ம் தேதி ஜனநாயகன் படம் ரீவைசிங் கமிட்டியின் பார்வைக்கு செல்ல தேவையான ஏற்பாடுகளை எல்லாம் படக்குழு தரப்பில் செய்துவிட்டது. ஆனால் இதுவரை ரீவைசிங் கமிட்டி ஜனநாயகன் படத்தை பார்க்கவில்லை. அப்படி கிடப்பில் போட்டுவிட்டது.

- Advertisement -

ரீவைசிங் கமிட்டிக்கு ஒரு படம் சென்றால் 18 நாட்களுக்குள் அதை கமிட்டி பார்த்துவிட வேண்டும் என்பதுதான் சென்சார் போர்டு விதிமுறை. ஆனால் 21 நாட்களாகியும் இன்னும் படத்தை பார்க்காமல் ரீவைசிங் கமிட்டி ரூல்ஸை காற்றில் பறக்க விட்டுள்ளது. இப்படி திட்டமிட்டே அந்த படத்தை ரீவைசிங் கமிட்டி அலட்சியப்படுத்துவதும் தெரிய வருகிறது.

மேலும் ரீவைசிங் கமிட்டி பார்க்க வேண்டிய 4 படங்கள் பெண்டிங்கில் இருப்பதாகவும் அதில் ஜனநாயகன் படம் 2வது என்றும் முதல் படத்தை பார்த்த பிறகே, 2வது படமாக ஜனநாயகன் படத்தை ரீவைசிங் கமிட்டி பார்க்கும் என்றும் கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் தேர்தலுக்கு முன்பு இந்த படம் திரைக்கு வந்துவிடக் கூடாது என்பதில் ரீவைசிங் கமிட்டி உஷாராக இருந்து வருகிறது. இது தளபதி ரசிகர்களை அப்செட் செய்திருக்கிறது.

- Advertisement -

சற்று முன்