- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல இயக்குனர் மகளுக்கு நடந்த திருமணம்… பரிசாக ரூ. 5 கோடி மொய் எழுதிய மும்பை...

பிரபல இயக்குனர் மகளுக்கு நடந்த திருமணம்… பரிசாக ரூ. 5 கோடி மொய் எழுதிய மும்பை தயாரிப்பு நிறுவனம் – வாய் பிளந்த கோலிவுட் வட்டாரம்!

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை. இந்த படங்களின் படுதோல்விக்கு பிறகு இப்போது மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி வரலாற்று நாவலை திரைப்படமாக உருவாக்கும் முயற்சிகளில் இயக்குனர் ஷங்கர் ஈடுபட்டு வருகிறார்.

சுமார் 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை தயாரிக்க தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் யாரும் முன்வராத நிலையில் மும்பையை சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளது. அதனால் இந்த படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் சதா விக்ரம் நெடுமுடி வேணு பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் அந்நியன். தமிழில் பெரிய வரவேற்பை பெற்ற அந்நியன் படத்தை இயக்குனர் ஷங்கர் இந்தியில் எடுக்க திட்டமிட்டார். அதற்காக ப்ரீ புரடக்சன்ஸ் ஏற்பாடுகளையும் அவர் செய்து வந்தார்.

மும்பையை சேர்ந்த நிதி நிறுவனம் மற்றும் தயாரிப்பு நிறுவனம் பென் மீடியா அந்நியன் படத்தை இந்தியில் தயாரிப்பதாக இருந்தது. இந்த படத்தில் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கவும் இயக்குனர் ஷங்கர் கமிட் செய்திருந்தார். ஆனால் இந்த படத்துக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஏற்படுத்திய சில இடையூறுகளால் அதனால் ஏற்பட்ட சிக்கல்களால் அந்த படம் உருவாகாமல் தடைபட்டு விட்டது.

அந்நியன் படத்தை இந்தியில் இயக்குவதற்காக பென் மீடியா தயாரிப்பு நிறுவனம் இயக்குனர் ஷங்கருக்கு ரூ. 5 கோடி வரை அட்வான்ஸ் தொகை தந்திருந்தது. ஆனால் அந்த படம் டிராப் ஆன போதிலும் அந்த அட்வான்ஸ் தொகையை ஷங்கரிடம் இருந்து அந்த நிறுவனம் நாகரிகம் கருதியும் அவர் மீது இருந்த நல்ல அபிப்ராயம் காரணமாகவும் திருப்பி கேட்கவே இல்லை.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் ஷங்கரின் மகள் திருமணம் நடந்த போது அந்த 5 கோடி ரூபாய் அட்வான்ஸ் தொகையை இந்த திருமணத்துக்கு பரிசாக தங்களது நிறுவனம் சார்பில் மொய் பணமாக எழுதிக்கொள்ளும்படி பென் மீடியா நிறுவனம் கூறியிருக்கிறது. இந்தியாவிலேயே அதிக மொய் பணம் எழுதப்பட்டது ஷங்கர் மகள் திருமணமாக தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்