நடிகர் கமல்ஹாசன் பல வெற்றிப் படங்களை, அதிரடியான ஹிட் படங்களை தந்திருக்கிறார். எனினும் அவரது சினிமா பயணத்தில் குறிப்பாக கடந்த 10, 20 ஆண்டுகளில் மிகப் பெரிய திருப்புமுனையை தந்த படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வௌியான விக்ரம் படம்தான். இது 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரி குவித்தது.
இந்த படம் தந்த உற்சாகத்தால் அதிக படங்களில் நடிப்பது, அரசியல் செயல்பாடு, பிக்பாஸ் நிகழ்ச்சி என தன்னை மிகவும் பரபரப்பாக்கிக் கொண்டார் நடிகர் கமல்ஹாசன். தொடர்ந்து இந்தியன் 2, இந்தியன் 3, கல்கி, தக்லைப், அன்பறிவ் இயக்கும் புதிய படம் என அடுத்தடுத்த படங்களில் கமல் மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
முதலில் மாநகரம் என்ற படத்தை கொடுத்து, தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி கவனத்தை ஈர்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கிய படம் கார்த்தி நடித்த கைதி. இந்த படமும் மாஸ் ஹிட் படமாக மாறியது. விஜய் நடிப்பில் மாஸ்டர் படமும் அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது.
தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். வில்லனாக விஜய் சேதுபதி, டிடெக்டிவ் அதிகாரியாக பகத் பாசில், சந்தான பாரதி, இளங்கோ குமரவேல், அருள்தாஸ், கடைசி காட்சியில் ரோலக்ஸ் கேரக்டரில் வந்து மாஸ் காட்டிய நடிகர் சூர்யா என படம் பிளாக் பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்தது.
அதன்பிறகு விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. ஆனால் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தது. இப்போது ரஜினி நடிப்பில் கூலி படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் அடுத்து கைதி 2 படத்தை இயக்க உள்ளார். இதற்கு எப்படியும் ஓராண்டு காலம் அவகாசம் தேவைப்படலாம்.
அதனால் 2025ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு விக்ரம் 2ம் பாகத்தை எடுக்க லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். ஏனெனில் கமல்ஹாசனும் கமிட் ஆகியுள்ள படங்களை முடித்துவிட்டுதான் விக்ரம் 2 படப்பிடிப்புக்கு வர முடியும். மேலும் இந்த விக்ரம் 2 படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ்தான் தயாரிக்க உள்ளது. இந்த 2ம் பாகம் படத்துக்கு விக்ரம் ரிட்டர்ன்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. டைட்டில் கேட்ட ரசிகர்கள், கொல மாஸ் சாரே என வியந்து கூறி வருகின்றனர்.





