நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான குட் பேட் அக்லி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக அஜீத்குமார் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். வலிமை துணிவு படங்களுக்கு பிறகு வெளியான விடாமுயற்சி படம் பலத்த ஏமாற்றத்தை தந்தது.
ஆனால் இந்த முறை குட் பேட் அக்லி படத்தில் அஜீத்குமார் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தி விட்டார். காட்சிக்கு காட்சி அஜீத்குமாரை மாஸ் காட்டி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், ஏகேவின் பேன் பாய் என்பதையும் உலகம் முழுவதும் நிரூபித்து விட்டார்.
படத்தின் கதை திரைக்கதை என்ற லாஜிக் எல்லாம் ஓரம்கட்டி வைத்து விட்டு அஜீத்குமாரை மட்டுமே ரசிக்கும் ரசிகனாக இந்த படத்தை பார்த்தால் யாருக்குமே இந்த படம் பிடிக்காமல் போகாது. ஏனெனில் அஜீத்குமாரின் புகழ்பாடும் ஒரு படைப்பாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வாலி அமர்க்களம் தீனா பில்லா வரலாறு என அஜீத்குமார் நடித்த பழைய படங்களின் ரெபரென்ஸ் மற்றும் பழைய பாடல்கள்தான் இந்த படத்தின் உயிர்நாடியாக உள்ளது. மற்றபடி அஜீத்குமாரை விதம் விதமாக ரசிப்பதற்கும் அவரை கொண்டாடுவதற்கும் ஒரு படமாக இது வெளியாகி உள்ளது.
முதல் நாளில் 30.9 கோடி ரூபாய், 2ம் நாளில் 90 கோடி ரூபாய் வசூலித்த குட் பேட் அக்லி படம் 3வது நாளில் செஞ்சுரி அடித்து விட்டது. ரூ. 120 கோடிக்கு மேல் உலகளவில் இந்த படத்தின் வசூல் சென்றுவிட்டதாக கூறப்படும் நிலையில் விரைவில் ரூ. 200 கோடி வசூலை எட்டிவிடும் என்று ரசிகர்கள் தரப்பில் ஆவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க நடிகர் நடிகையர் பெற்ற சம்பளம் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் அஜீத்குமார் ரூ. 165 கோடி, நடிகை திரிஷா ரூ. 8 கோடி வில்லன் நடிகர் அர்ஜூன்தாஸ் ரூ. 80 லட்சம், நடிகை பிரியா வாரியர் ரூ. 15 லட்சம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ரூ. 12 கோடி இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் ரூ. 15 கோடி என சம்பளம் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.





