- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென முதல்வர் எம்ஜிஆரை கட்டிப்பிடித்து முத்தமிட்ட நபர் - பதறிப் போய் பாய்ந்து வந்த பாதுகாவலர்கள்,...

திடீரென முதல்வர் எம்ஜிஆரை கட்டிப்பிடித்து முத்தமிட்ட நபர் – பதறிப் போய் பாய்ந்து வந்த பாதுகாவலர்கள், அப்போது எம்ஜிஆர் சொன்ன அந்த வார்த்தைகள்!

- Advertisement -

கடந்த பல ஆண்டுகளுக்கு நடந்த ஒரு சம்பவம் இது. கர்நாடகாவில் ஒரு மலை கிராமத்தில் இருந்து வந்த நரிக்குறவர்கள் கூட்டமாக தமிழக முதல்வர் எம்ஜிஆரை காண வந்திருந்தனர். அதில் வயதில் மூத்த நரிக்குறவர் ஒருவர் வெற்றிலை போட்ட வாயுடன் திடீரென எம்ஜிஆரை கட்டியணைத்து முத்தமிட்டு விட்டார். அவரது உதடுகளின் சிவப்பு அடையாளம் எம்ஜிஆரின் கன்னத்தில் பதிந்து விட்டது.

இதை எதிர்பாராத எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் வேகமாகப் பாய்ந்து அவரை விலக்க முற்பட்டனர். அவர்களைத் தடுத்த எம்ஜிஆர் சிரித்துக் கொண்டே அவரை விடுங்கப்பா, அவங்க குடும்பத்தில் என்னையும் ஒருத்தனா நினைக்கறதால அன்பை இப்படிக் காட்டுறாங்க. இதில் தவறு ஒன்றுமில்லை’ என்று சாதாரணமாகக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

அதற்கு பிறகு முதல் நாள் எம்ஜிஆரை பார்த்துவிட்டுச் சென்ற அதே நரிக்குறவர் சமூக மக்கள் மறுநாளும் கூட்டமாக எம்ஜிஆரை பார்க்க வந்துவிட்டனர். வெளியே கிளம்பிக் கொண்டிருந்த எம்ஜிஆர், அவர்களிடம் நலம் விசாரித்தார். முதல் நாள் அவரை முத்தமிட்ட அந்த நரிக் குறவர், சாமி உங்க தயவால என் ஆசை நிறைவேறிடுச்சு சாமி என்று கூறியிருக்கிறார்.

அதைக்கேட்டு ஆச்சரியமாக என்னது? என்று எம்ஜிஆர் கேட்டிருக்கிறார். நம்பள மாதிரி ஆளுங்கள எல்லாம் நீங்க பாக்க மாட்டீங்கன்னு சிலர் சொன்னாங்க. அவர்களிடம் எம்ஜிஆரை முத்தமிட்டு காட்டுறேன்னு சபதம் செய்தேன். அதுல ஜெயிச்சுட்டேன். என்னை மன்னிச்சுடுங்க சாமி’ என்று கூறினார்.

- Advertisement -

அதைக் கேட்டு சிரித்த எம்.ஜி.ஆர், பரவாயில்லை. இனிமேல் இதுபோன்று வேறு யாரையும் முத்தமிடுவதாக சபதம் செய்து விடாதே. அது பெரிய வம்பாக போயிடும் என்று சொல்லி, பணியாளர்களை அழைத்து வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு போடச் சொல்லி அவர்களுடன் அவரும் சாப்பிட்டு அவர்களை வழியனுப்பி வைத்திருக்கிறார்.

தொண்டர்களையும் ரசிகர்களையும் பார்க்க விரும்பாமல், தங்களை நெருங்கி தொடக் கூட அனுமதிக்காத பிரபலங்களுக்கு மத்தியில் எம்ஜிஆர் மட்டும் இன்றும் மக்கள் தலைவராக கொண்டாடப்படுவதற்கு இதுபோன்ற சம்பவங்களே முக்கிய காரணம். எவ்வளவு பெரிய நடிகராக இருந்தும் இந்த நாட்டையே ஆட்சி செய்தும் அவரது பெருந்தன்மையும் பண்பும் மாறாமல் நல்ல மனிதராக வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்