- Advertisement -
Homeபொழுதுபோக்குகாந்தாரா 2 படப்பிடிப்புக்கு தயாரான ரிஷப் ஷெட்டி, எகிறி அடிக்குது படத்தின் பட்ஜெட் - அவருக்கு...

காந்தாரா 2 படப்பிடிப்புக்கு தயாரான ரிஷப் ஷெட்டி, எகிறி அடிக்குது படத்தின் பட்ஜெட் – அவருக்கு எடுக்கப் போற சப்ஜெக்ட், இப்பவே ஒடம்பு சிலிர்க்குது

- Advertisement -

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படம் காந்தாரா. முதலில் கன்னடத்தில் வெளிவந்த இந்த படம், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது. பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிறமொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட்டது. பிற மொழி ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடி வரவேற்றனர். படம் எல்லா ஊர்களிலும் வசூல் அள்ளியது.

இந்த படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படத்தின் இயக்குநரும், ஹீரோவுமான ரிஷப் ஷெட்டியை தனது போயஸ்கார்டன் வீட்டுக்கே வரவழைத்து பாராட்டினார். ஆன்மிகத்துடன், யதார்த்த வாழ்க்கையை சொன்ன இந்த படம், நிச்சயம் ஒரு புதுமையான படைப்பாக இருந்ததால், படத்தை பார்த்த அனைவருமே படம் குறித்து பாராட்டி பேசினர்.

- Advertisement -

குறைந்த பட்ஜெட்டில் ரூ. 8 கோடி செலவில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட இந்த படம், ரூ.200 கோடி வரை வசூல் குவித்தது. இந்த படம் இந்தளவுக்கு வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாக அந்த படத்தில் வரும் அந்த காந்தாரா தெய்வமும், அது எழுப்புகிற விநோதமான சத்தமும், ரசிகர்களின் மனங்களை கட்டிப்போட்டது.

கடவுள் பக்தியால் தானமாக வழங்கிய நிலத்தை பறிக்க, ஜமீன்தாராக இருக்கும் வில்லன், கடவுள் அவதாரத்தில் வழிபடும் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்வதும், அதுவரை ஊருக்குள் ரவுடியாக பிரச்னைகள் செய்துக்கொண்டிருந்த ஹீரோ, திடீரென கடவுளாக அவதாரம் எடுத்து, வில்லனை பழிவாங்குவதுதான் கதை.

- Advertisement -

ரசிகர்களை மிரட்டிய, அதே வேளையில் மனதை கவர்ந்த காந்தாரா படத்தின் 2ம் பாகம் எப்போது வெளிவரும் என தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பலதரப்பு ரசிகர்களும் காத்திருந்த நிலையில், வரும் 27ம் தேதி, காந்தாரா படத்தின் 2ம் பாகம் படப்பிடிப்பு உடுப்பியில் பட பூஜையுடன் துவங்குகிறது.

இந்த படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இதில் காந்தாரா கடவுளின் 4ம் ஆண்டு நூற்றாண்டு கதை அதாவது, காந்தாராவின் ரிஷிமூலம் சொல்லும் விதமாக இந்த படம் எடுக்கப்பட உள்ளது. அதாவது காந்தாரா கடவுள் உருவான மூலக்கதையை அடிப்படையாக கொண்டு காந்தாரா 2 எடுக்கப்படுகிறது. இதிலும் ஹீரோ, டைரக்டர் என ரிஷப் ஷெட்டி செயல்படுகிறார். இந்த தகவல் காந்தாரா படம் ரசித்த ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்