தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக கவனிக்கப்படும் ஒரு சிறந்த நடிகராக இருப்பவர் சியான் விக்ரம். கமல்ஹாசனை போலவே நடிப்புக்காக தன்னை வருத்திக்கொள்ள தயங்காதவர். குறிப்பாக தன் கேரக்டருக்காக நிறைய மெனக்கெடுவார். அதனால் சியான் விக்ரம் நடிப்புக்கும், அவரது தொழில் ஈடுபாடுக்கும் தனி மரியாதை உண்டு.
இப்போது சியான் விக்ரம் நடித்த பா ரஞ்சித்தின் தங்கலான் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மிகப்பெரிய வரவேற்பை இந்த படம் என்று கூறப்படுகிறது. நிச்சயம் விருதுகளை குவிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. விக்ரம் நடித்த படங்களில் காசி, அன்னியன், ஐ, சேது போன்ற வரிசையில் இந்த படமும் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என்று தெரிய வருகிறது.
அதே நேரத்தில் கௌதம் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் படம் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் நீடிக்கிறது. அந்த படம் வெளியாவதில் நீடிக்கும் தாமதத்தால் இயக்குனர் கௌதம் மேனன் பயங்கரமான மன உளைச்சலில் தவிக்கிறார். இந்த படம் வெளியானால் விக்ரம் நடிப்பு அதிக பாராட்டை பெறும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தின் டைரக்டர் சிதம்பரத்தை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார் சியான் விக்ரம். மீண்டும் சிலமுறை அவர்கள் சந்திப்பு நிகழ்ந்த நிலையில், அடுத்து சிதம்பரம் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பது உறுதியாகி விட்டது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளன. மலையாள படம் ஒன்றை முடித்துவிட்டு அடுத்து சியான் விக்ரம் நடிக்கும் படத்தை மஞ்சும்மெல் பாய்ஸ் பட இயக்குனர் சிதம்பரம் இயக்குகிறார்.
இதற்கிடையே பண்ணையாரும் பத்மினியும், சித்தா ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய டைரக்டர் அருண்குமார் டைரக்ஷனில் நடிகர் சியான் விக்ரம் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று துவங்குவதாக இருந்தது. ஆனால் அரசியல்வாதிகள் செய்யும் தில்லுமுல்லுகளாகல் அந்த படப்பிடிப்பு தள்ளிப் போயுள்ளது.
வருகிற 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான பிரசாரம் தீவிரமாக நடக்கிறது. இதில் மக்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்க லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணப்புழக்கம் இருப்பதால், தேர்தல் பறக்கும் படை, பெரிய தொகை கொண்டு செல்வோரை பிடித்து விசாரணை நடத்தி பணத்தை பறிமுதல் செய்து வருகிறது. அதனால் வரும் 14ம் தேதி துவங்க வேண்டிய விக்ரம் பட ஷூட்டிங்கை ஏப்ரல் 22ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். ஏனெனில் ஷூட்டிங் செலவுக்காக லட்சக்கணக்கில் பணத்தை படக்குழுவினர் எடுத்துச் செல்ல முடியாத சூழல்தான். மதுரையில் 70 நாட்கள், திருத்தணியில் 20 நாட்கள் இந்த படத்தின் ஷூட்டிங் நடத்தப்படுகிறது.





