- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் பிரதீப் வருகிறாரா? - எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று அடிக்கடி சொல்கிற கமல்,...

மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் பிரதீப் வருகிறாரா? – எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று அடிக்கடி சொல்கிற கமல், இதுக்கு என்னங்க சொல்றாரு?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி, பிக்பாஸ். விஜய் டிவியில் கடந்த 6 ஆண்டுகளாக ஔிபரப்பான நிலையில், இப்போது ஏழாவது ஆண்டில் பிக்பாஸ் சீசன் 7 கடந்த 40 நாட்களாக நடந்து வருகிறது. இப்போதும் கமல்தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஆனால் 6 சீசன்களாக எந்த குற்றச்சாட்டுக்கும் சிக்கிக் கொள்ளாத கமல், இந்த முறை வசமாக சிக்கிக்கொண்டுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் அவரை வறுத்து எடுத்து வருகின்றனர். இப்போது, அவரது பிறந்த நாள் விழாவிலும் ரசிகர்களை புறக்கணித்து அசிங்கப்படுத்திய அவரது செயல், இன்னும் அவர் மீதான கோபத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

பிக்பாஸ் வீட்டுக்குள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப்புக்கு, மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது. நல்ல போட்டியாளரான பிரதீப்பை, கமல் அரசியல் செய்து அநியாயமாக வெளியேற்றி விட்டார் என, அந்த போட்டியில் பங்கேற்ற நடிகர் யுகேந்திரனும் பகிரங்கமாக குற்றம் சாட்டி இருக்கிறார்.

16 ஆண்டுகளுக்கு மேல் கவுதமியுடன் தாலி கட்டாமல் குடும்பம் நடத்திய கமல், அவரது டீன் ஏஜ் பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேற்றிய கமல், பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச, என்ன தகுதி இருக்கிறது. அவரது ஸ்ருதி, அக்‌ஷரா என்ற இரண்டு மகள்களும் தந்தையின் பாதுகாப்பில் இல்லாமல் மும்பையில் இருக்கின்றனர். அதையே அவரே செய்ய முடியாத போது, மற்ற பெண்களின் பாதுகாப்புக்கு இவர் என்ன கியாரண்டி தர முடியும் என்றும் கிண்டலடிக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில், மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் பிரதீப் அழைக்கப்படுவார் என்ற தகவல் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதீப், நீங்கள் எனக்கு நல்ல விளையாட்டை கொடுத்தால், நான் அதை சிறந்த நிகழ்ச்சியாக அதை உங்களுக்கு தருவேன். ஒரு பாதி படம் இடைவேளை முடிந்து வருவதுபோல், பழிவாங்கி ஆடுகிறனே் என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்த பதிவில், ரொம்ப ஷார்ப்பான புள்ளிங்களால்தான் அது முடியும்.என்னை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்புவதாக இருந்தால், எனக்கு 2 போட்டியாளர்களை வெளியே அனுப்புவதற்காக 2 ரெட்கார்டுகள் தர வேண்டும். நான்தான் கேப்டனாக இருக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதித்திருக்கிறார் ஆண்டனி. ஆனால் இந்த பதிவுக்கு கமல் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. ஏற்கனவே அவர் பிரதீப் விஷயத்தில் கெத்து காட்டி வாங்கி கட்டியது போதும் என நினைத்து விட்டார் என கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

- Advertisement -

சற்று முன்