- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் நடிக்க வேண்டிய கதையில், இனி நடிக்கப் போவது இவரா? - இப்போ டிரண்டிங்குல இந்த...

விஜய் நடிக்க வேண்டிய கதையில், இனி நடிக்கப் போவது இவரா? – இப்போ டிரண்டிங்குல இந்த கதையை படமா எடுத்தாலே செம வைரலா ஓடுமே ப்ரோ?

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர் மட்டுமல்ல, வசூலில் ரஜினியை மிஞ்சிய ஒரு நடிகராக விஜயை குறிப்பிடுகின்றனர். ஜெயிலர் வசூல் ரூ. 525 கோடியை எட்டிய நிலையில், லியோ படம், அந்த வசூலை கடந்து ரூ. 540 கோடியை எட்டியுள்ளது.

இப்போது விஜய், வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் 68 படத்தில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து விஜய் 69 படம், இயக்குநர் ஷங்கர் இயக்கும் அரசியல் படமாக இருக்கலாம் என்ற தகவல் வெளிவந்துள்ளது. 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் இந்த படத்தை எடுக்குமாறு, ஷங்கரிடம் விஜய் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜய் நடிக்க உருவாக்கப்பட்ட ஒரு கதையில், இப்போதைய இளம் நடிகர் நடிக்க இருப்பதாக இன்று தகவல் வெளிவந்துள்ளது. அந்த படத்தை இயக்குவது ரமணா, கத்தி, சர்கார், துப்பாக்கி, ஏழாம் அறிவு போன்ற மிகச்சிறந்த படங்களை இயக்கிய ஏஆர் முருகதாஸ் என்பதும் உறுதியாகி உள்ளது.

ஏஆர் முருகதாஸ், தமிழில் மிகச்சிறந்த ஒரு இயக்குநர். இவரது இயக்கத்தில் விஜய் மூன்று படங்களில் நடித்தார். கத்தி, துப்பாக்கி, சர்கார் ஆகிய 3 படங்களுமே நல்ல வெற்றி படங்களாக அமைந்தது. விஜயின் 66 வது படத்துக்காக கதையை ஏஆர் முருகதாஸ் சொன்ன போது அந்த கதை அவருக்கு பிடிக்கவில்லை.

அதனால் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்தார். பீஸ்ட் விமர்சன ரீதியாக தோல்வி படம் என்றால், வசூல் ரீதியாக விஜய்க்கு வெற்றி படமாக இருந்தது. இந்நிலையில், விஜயிடம் ஏஆர் முருகதாஸ் சொல்லி நிராகரித்த கதையில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஏஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் நடிக்கும் 23 வது படத்தை இயக்குகிறார். விஜயிடம் சொல்லிய கதையை சில திருத்தங்களுடன் சொன்னதால், கதை மிகவும் பிடித்துவிட்டதாக கூறிய சிவகார்த்திகேயன், அந்த படத்தை அவரே தயாரிக்கவும் முடிவு செய்திருக்கிறார். இமான் குறித்த குற்றச்சாட்டில், இவரது கதையே இப்போது டிரண்டிங்கில் இருப்பதால், அதையும் படத்துல சேர்த்துடுங்க முருகதாஸ் ப்ரோ என, பலரும் சோஷியல் மீடியாவில் கலாய்த்து வருகின்றனர்.

சற்று முன்