- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது... ஜனநாயகன் படத்தில் விஜய் கட்சிக்காரரு நடிச்சிருக்காரா... அடடே அந்த மூன்று இயக்குனர்கள் கூட படத்துல...

என்னது… ஜனநாயகன் படத்தில் விஜய் கட்சிக்காரரு நடிச்சிருக்காரா… அடடே அந்த மூன்று இயக்குனர்கள் கூட படத்துல வாராங்களா… சம்பவம் செய்ய காத்திருக்கும் ஹெச் வினோத்…

- Advertisement -

நடிகர் விஜய், தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியின் தலைவர் விஜயாக மாறிவிட்டார். ஆரம்பக் கட்டத்திலிருந்து நடிப்பை ஒரு பக்கத்தில் வைத்து விட்டு மற்றொரு பக்கம் தனது ரசிகர் மன்றம் மூலம் உதவி செய்து வந்தார் விஜய். பிறகு இதனை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியாக மாற்றினார். தமிழக வெற்றிக் கழகம் என்றும் இதற்கு பெயர் வைத்தார்.

அரசியல் கட்சி ஆரம்பித்து விட்டதால் இனிமேல் திரைத்துறையில் கவனம் செலுத்தப் போவதில்லை என்று கூறியிருந்தார் விஜய். அந்த நேரத்தில் அவர், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்து வந்தார். இதன் பிறகு, தான் ஒப்புக்கொண்ட ஒரு திரைப்படத்தில் மட்டும் நடித்துவிட்டு, அரசியலில் மட்டுமே கவனம் செலுத்த இருப்பதாக விஜய் கூறியிருந்தார்.

- Advertisement -

அதன்படி தற்போது, கே வி என் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அஜித் குமாரை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு ஆகிய மூன்று திரைப்படங்களை கொடுத்த ஹெச் வினோத் இந்தத் திரைப்படத்தை இயக்கி வருகிறார். போலீஸ் ஸ்டோரி ஆக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் இந்த திரைப்படத்திலிருந்து முதல் வீடியோ வெளியானது. அதில் போலீஸ் உடை அணிந்து, கையில் வாளுடன் கம்பீரமாக காட்சியளித்தார் விஜய். அனிருத் இசையில் பின்னணி இசையும் நன்றாக இருப்பதாக பலரும் கூறினார்கள். இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மமீதா பைஜூவுக்கும் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இதுபோக பிரகாஷ்ராஜ், நரேன், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அனிமல் திரைப்படத்தில் வில்லனாக வந்து மிரட்டிய, பாபி தியோல்தான் இதிலும் விஜய்க்கு வில்லனாக நடித்திருக்கிறார். இதன் பெரும்பாலான படப்பிடிப்பு சென்னையை அடுத்த பையனூர் தளத்தில் எடுக்கப்பட்டது. சில காட்சிகளை எடுப்பதற்காக மட்டும் படக்குழு கொடைக்கானல் சென்றது. தற்போது இதன் சூட்டிங் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் இந்த திரைப்படத்தில் அரசியல்வாதியாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்ல இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், அட்லி மற்றும் நெல்சன் ஆகிய மூன்று இயக்குனர்களும் பத்திரிக்கையாளராக கேமியோ ரோலில் வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நிச்சயம் இது இயக்குனர் வினோத்தின் ட்ரீட்டாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்