- Advertisement -
Homeபொழுதுபோக்குமாஸ் ஹிட் படங்களை கொடுத்த புதுமுக இயக்குனர்கள்… அடுத்த பட வாய்ப்பு இன்னுமா கிடைக்கலே? -...

மாஸ் ஹிட் படங்களை கொடுத்த புதுமுக இயக்குனர்கள்… அடுத்த பட வாய்ப்பு இன்னுமா கிடைக்கலே? – தமிழ் சினிமாவில் இப்படியும் ஒரு அவலமா?

- Advertisement -

எப்போதுமே ஒருவர் பெரிய வெற்றியை தமிழ் சினிமாவில் பெற்று விட்டால் அவருக்கான வாய்ப்புகள் அடுத்தடுத்து தேடி வரும். அந்த வாய்ப்புகளை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டால் இன்னும் அடுத்தடுத்த உயரங்களை அடைந்து அவர்கள் சில பல ஆண்டுகளில் புகழின் உச்சத்தை தொட்டுவிட முடியும். திறமையும் உழைப்பும் அதற்கேற்ப நல்ல நேரமும் இருந்தால் அவர்கள் அதே செல்வாக்கில் சினிமாவில் நீடிக்க முடியும்.

இப்படிதான் இன்றைய தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்கள் உச்சம் தொட்ட புகழை அடைந்திருக்கின்றனர். அதில் ஒரு சிலர் தங்களது இடத்தை தக்க வைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஒரு சிலர் மீண்டும் மீண்டும் தொடர் வெற்றிகளை தர முடியாமல் தங்களது செல்வாக்கை இழந்து சில படிகள் கீழே இறங்கியிருக்கின்றனர். இது சினிமாவில் தொழிலில் தவிர்க்க முடியாத ஏற்ற இறக்கம்தான்.

- Advertisement -

ஆனால் இயக்குனரான முதல் படத்திலேயே அபார வெற்றியை பெற்ற சில தமிழ் சினிமா இயக்குனர்கள் பல மாதங்களாக சில ஆண்டுகளாக தங்களது அடுத்த படத்தை டைரக்ட் செய்ய முடியாமல் அதற்கான வாய்ப்பு இன்னும் அமையாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். சில ஹீரோக்களின் படங்களை இயக்க கமிட் ஆன அவர்கள், இன்னும் ஷூட்டிங் துவங்காத நிலையில் வெறுமனே இருக்கும் ஒரு அவல நிலை தொடர்கிறது.

குறிப்பாக மணிகண்டன் நடித்த குட்நைட் என்ற ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் விநாயக் சந்திரசேகர், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க கமிட் ஆனார். ஆனால் அந்த படம் எப்போது படப்பிடிப்பு துவங்கும் என தெரியாத நிலையில் ஆண்டுக்கணக்கில் அவர் அடுத்த படத்தை டைரக்ட் செய்யாமல் இருந்து வருகிறார்.

- Advertisement -

அதே போல் பார்க்கிங் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சிம்பு நடிக்கும் படத்தை இயக்க கமிட் ஆனார். எஸ்டிஆர் 49 என பெயரிடப்பட்ட அந்த படமும் டிராப் ஆகி விட்டது. இதற்கிடையே பார்க்கிங் படத்துக்கு 3 தேசிய விருதுகளும் கிடைத்துள்ள நிலையில் அந்த படத்தின் இயக்குர் ராம்குமார் பாலகிருஷ்ணன் அடுத்த பட வாய்ப்பின்றி காத்திருக்கின்றனர்.

அதே போல் சசிக்குமார் நடித்த அயோத்தி படத்தின் இயக்குனர் மந்திரமூர்த்தி நடிகர் ரவிமோகன் நடித்த அடங்க மறு படத்தின் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் போன்ற சிறந்த இயக்குனர்களுக்கு இன்னும் அடுத்த பட வாய்ப்பு இன்னும் அமையவில்லை. இப்படிப்பட்ட திறமையான அருமையான படங்களை தந்த இயக்குனர்கள் பட வாய்ப்புகளின்றி முடங்குவது எதிர்காலத்தில் அவர்களை மட்டுமல்ல, தமிழ் சினிமாவின் பிரகாசமான எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக மாற்றிவிடும் அபாயம் உள்ளது.

- Advertisement -

சற்று முன்