- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி காந்த் என்னை பாராட்டினார். என் சீரியலை அவர் பார்க்கிறாராம். மகிழ்ச்சியில் பேசிய திருச்செல்வன்

ரஜினி காந்த் என்னை பாராட்டினார். என் சீரியலை அவர் பார்க்கிறாராம். மகிழ்ச்சியில் பேசிய திருச்செல்வன்

- Advertisement -

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரும் ரசித்துப் பார்க்கும் வகையில் உள்ளது. இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக அந்த சீரியலில் நடித்து வரும் மாரிமுத்து இணையத்தில் சமீப காலமாக ட்ரெண்டாகி வருகிறார்.

இந்த சீரியலின் இயக்குனரான திருச்செல்வன் ஏற்கனவே கோலங்கள் என்னும் மெகா சீரியலை இயக்கி பெரிய அளவில் பெயர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் கோலங்கள் சீரியலை இயங்கிக்கொண்டிருந்த சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் ஏற்பட்ட ஒரு சந்திப்பு குறித்து ஒரு பேட்டியில் விவரித்துள்ளார்.

- Advertisement -

அது குறித்து அவர் பேசுகையில் நான் கோலங்கள் சீரியலை இயக்கிய சமயத்தில் அந்த சீரியலில் நடித்த நடராஜன் ரஜினி உடன் நன்கு பழகக் கூடியவர். அப்போது ஒரு முறை நடராஜன் என்னிடம், ரஜினிகாந்த் இந்த சீரியலை அவ்வப்போது பார்ப்பதாக என்னிடம் தெரிவித்திருந்தார். நான் உடனே அவரிடம், நான் பெரிய ரஜினி ரசிகன் என்று கூறினேன்.

இந்த நிலையில் ஒருநாள் ரஜினியை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் அவரை பார்க்க சென்றேன். அங்கே பெரிதளவில் கூட்டமிருக்கும், நாம் எப்படி பேசப்போகிறோம், என்ன பேச போகிறோம் என்று தெரியாமல் நான் அங்கு சென்றேன். ஆனால் அங்கு சென்று பார்த்த பிறகு தான் என்னைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லை என்பது எனக்கு தெரிந்தது.

- Advertisement -

அதே சமயம் அறைக்குள் வந்த ரஜினி, அவராகவே பேச ஆரம்பித்தார். மிகவும் கேஷுவலாக அவர் பேசினார். இதன் காரணமாக எங்களுக்குள் நல்ல ஒரு உரையாடல் இருந்தது .அப்போது அவர் எப்படி 1500 எபிசோடுகளை உருவாக்கினீர்கள் என்று மிகவும் ஆச்சரியமாக கேட்டார். அதேபோல் சீரியலை விடுத்து சினிமாவிற்குள் வாருங்கள் என்றும் கூறினார். அதோடு எனக்காக ஏதாவது கதை வைத்துள்ளீர்களா என்று கேட்டார்.

உடனே நான் ஒரு கதை சொன்னேன். ஆனால் அது ஹீரோயின்மை மையமாக வைத்த ஒரு கதை. அதை கேட்ட அவர், எனக்கு கதை சொல்ல சொன்னால் ஹீரோயினுக்கு கதை சொல்கிறீர்களே என்று சிரித்தபடி கூறினார். அவர் கூறிய வார்த்தைகள் இன்றும் என் நினைவில் அப்படியே இருக்கிறது. பேசி முடித்துவிட்டு கிளம்பும்போது அவருடன் போட்டோ எடுக்க ஆசைப்பட்டேன் ஆனால் என்னிடமிருந்த மொபைலில் அவ்வளவு கிளாரிட்டியான கேமரா இல்லை.

உடனே அவர் ஒரு கேமராமேனை தயார் செய்து என்னுடன் நின்று ஒரு போட்டோ எடுத்து அதை பிரேம் செய்து என்னுடைய வீட்டு முகவரிக்கு அனுப்பி வைத்தார். அவ்வளவு தங்கமான மனிதர் அவர். தற்போது கூட சிறப்பாக ஓடி கொண்டு இருக்கும் எதிர்நீச்சல் சீரியலை அவர் பார்ப்பதாக அந்த சீரியலில் நடித்து வரும் மாரிமுத்து என்னிடம் கூறியிருந்தார். மாரிமுத்து, ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தில் அவரோடு இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்