- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவர் சொன்னதை தான் செய்தேன், அதை திறந்தாலே எனக்கு பயமாக இருக்கிறது… - புலம்பித்...

அவர் சொன்னதை தான் செய்தேன், அதை திறந்தாலே எனக்கு பயமாக இருக்கிறது… – புலம்பித் தள்ளிய குந்தவை ஸாரி… இந்திராணி திரிஷா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இருப்பவர் நடிகை திரிஷா. இடையிடையே சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தாலும் ஏதேனும் ஒரு நல்ல கேரக்டரில் நடித்து மீண்டும் கம்பேக் கொடுத்து விடுவார். அப்படிதான் விக்ரமுடன் அவர் நடித்த சாமி படம் மாமி கேரக்டர் அமைந்தது. பிறகு கொடி படத்தில் வில்லியாக சிறப்பாக நடித்திருந்தார்.

அதன்பிறகு இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி திரிஷா இணைந்து நடித்த 96 படம் திரிஷாவுக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. அதன்பிறகு பொன்னியின் செல்வன் 1 பொன்னியின் செல்வன் 2 என மணிரத்னம் இயக்கிய இந்த 2 படங்களிலும் திரிஷாவின் குந்தவை கேரக்டர் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுத் தந்தது.

- Advertisement -

பிறகு லியோ விடாமுயற்சி குட் பேட் அக்லி ஐடென்டி தக்லைஃப் ஆகிய படங்களில் நடித்த திரிஷா அடுத்ததாக சூர்யாவுடன் நடித்த வேட்டை கருப்பு சிரஞ்சீவியுடன் நடித்த விஸ்வம்பரா ஆகிய படங்களும் விரைவில் திரைக்கு வர இருக்கின்றன. இந்நிலையில் தக்லைஃப் படத்தில் திரிஷாவின் கேரக்டர் பெரிய விமர்சனத்தில் சிக்கியிருக்கிறது. திரிஷா கமல் சிம்பு இருவரில் யாருக்கு சொந்தம் என்ற கேங்ஸ்டர் சண்டைதான் இந்த படம் என்று ரசிகர்கள் கலாய்க்கின்றனர்.

இதுகுறித்து நடிகை திரிஷா கூறியிருப்பதாவது, மணிரத்னம் இயக்கத்தில் நான் நடித்த பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடினார்கள். குந்தவை என் சினிமா வாழ்க்கையில் முக்கியமான பாத்திரமாக அமைந்தது. ஆனால் தக்லைஃப் இந்தியராணி கேரக்டரை திட்டி தீர்க்கிறார்கள். ஒரு சிலர் கமல், சிம்பு கேரக்டர்களுக்கு இடையேயான அந்த கேரக்டரின் காதல் காரணமாக ஆபாச வார்த்தைகளால் விமர்சனம் செய்கிறார்கள்.

- Advertisement -

இன்னும் சிலர் மலையாள பிட்டு படத்துடன் ஒப்பிடுகிறார்கள். தக்லைஃப் ஒரு படம். இந்திராணி அது ஒரு கேரக்டர். நான் இயக்குனர் சொன்னபடி நடித்தேன். அவ்வளவுதான். மணிரத்னம் கமல்ஹாசன் இணைந்த கூட்டணியை இப்படி கடுமையாக விமர்சனம் செய்யலாமா? நான் என்ன செய்தேன்? சோசியல் மீடியாவை திறந்தாலே பயமாக இருக்கிறது.

ஒரு சினிமாவை வாழ்க்கையுடன் ஒப்பிடுவது ஏன் என்று நடிகை திரிஷா புலம்பி இருக்கிறார். தக்லைஃப் பட விமர்சனம் அவரை கடுமையாக அப்செட் ஆக்கியுள்ளது. மேலும் தக்லைஃப் படம் கதை திரைக்கதை சரியில்லாத காரணத்தால் தான் இவ்வளவு பிரச்சனை என்கின்றனர். இதில் திரிஷாவை மையப்படுத்தி கமல் சிம்பு இருவருக்கும் நடக்கும் போட்டியாக வலைதளங்களில் நிறைய மீம்ஸ் வலம் வருகின்றன. அதே நேரத்தில் படத்தையும் கண்டபடி விமர்சித்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்