- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவாஜியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு, விஜய்க்கு கிடைத்த சான்ஸ் அஜித்துக்கு கிடைக்காதது ஏன் தெரியுமா?

சிவாஜியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு, விஜய்க்கு கிடைத்த சான்ஸ் அஜித்துக்கு கிடைக்காதது ஏன் தெரியுமா?

- Advertisement -

கடந்த 1997 ஆம் ஆண்டு விஜய்- சிவாஜி கணேசன் ஆகியோர் இணைந்து நடித்த திரைப்படம் “ஒன்ஸ் மோர்”. இத்திரைப்படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருந்தார். சிவாஜியுடன் இணைந்து நடிப்பது என்பது பலருக்கும் ஒரு கனவாக இருந்தது. அந்த வகையில் விஜய்க்கு அந்த கனவு நிறைவேறியது. ஆனால் அஜித்குமார், சிவாஜியுடன் இணைந்து நடிக்கவில்லை. எனினும் அதற்கான வாய்ப்பும் ஒரு முறை அவரை தொட்டு சென்றிருக்கிறது.

1999 ஆம் ஆண்டு சிவாஜி கணேசனும் விஷாலின் சகோதரரான விக்ரம் கிருஷ்ணாவும் இணைந்து நடித்த திரைப்படம் “பூப்பறிக்க வருகிறோம்”. இத்திரைப்படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் உருவானது குறித்து ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை இப்போது பார்க்கலாம்.

இயக்குனர் ஏ.வெங்கடேஷ் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் “மகாபிரபு”. இத்திரைப்படத்தை தயாரித்தவர் விஷாலின் தந்தையான ஜிகே ரெட்டி. அதனை தொடர்ந்து ஏ.வெங்கடேஷ் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தப்பிறகு, ஒரு முறை ஜிகே ரெட்டி ஏ.வெங்கடேஷை அழைத்தாராம்.

தனது மூத்த மகனான விக்ரம் கிருஷ்ணாவை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் வகையில் ஒரு திரைப்படத்தை தயாரிக்கப்போவதாகவும் அந்த திரைப்படத்தை தாங்கள்தான் இயக்க வேண்டும் எனவும் ஏ.வெங்கடேஷிடம் கூறியிருக்கிறார். தன்னை இயக்குனராக ஆக்கிய ஜிகே ரெட்டியிடம் மிகவும் மரியாதை வைத்திருந்த ஏ.வெங்கடேஷ் அந்த புராஜெக்ட்டை ஒப்புக்கொண்டாராம்.

ஏ.வெங்கடேஷ் ஏற்கனவே விஜய்யையும் சிவாஜியையும் மனதில் வைத்து ஒரு கதையை எழுதியிருந்தாராம். ஆனால் விஜய், சிவாஜி கணேசன் ஆகியோரின் நடிப்பில் ஒன்ஸ் மோர் திரைப்படம் வெளிவந்துவிட்டதால் அந்த கதையை கிடப்பில் போட்டு வைத்திருந்தாராம். இந்த நிலையில் அந்த கதையில் விக்ரம் கிருஷ்ணாவையும் சிவாஜி கணேசனையும் இணைத்து நடிக்க வைத்தால் மிக நன்றாக இருக்கும் என நினைத்து, அந்த கதையை ஜிகே ரெட்டியிடம் கூறியிருக்கிறார்.

ஜிகே ரெட்டிக்கு அந்த கதை பிடித்துப்போக, பிரபல இயக்குனரான சி.வி. ராஜேந்திரனின் மூலம் சிவாஜி கணேசனை சந்தித்து அந்த கதையை கூறி அவரிடம் ஓகே வாங்கியுள்ளார். ஆனால் அதன் பின் சி.வி.ராஜேந்திரன் ஏ.வெங்கடேஷிடம் ஒரு ஆலோசனை கூறினாராம். “இந்த கதையில் அஜித்தையும் சிவாஜி கணேசனையும் இணைத்து நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும். அஜித்தின் கால்ஷீட்டை நான் வாங்கித் தருகிறேன். இந்த படத்தை நானே தயாரிக்கிறேன், கொஞ்சம் யோசித்து சொல்லு” என கூறினாராம்.

வீட்டிற்கு சென்று இரவு முழுவதும் யோசித்து பார்த்த ஏ.வெங்கடேஷ், தனக்கு முதல் பட வாய்ப்பு கொடுத்த ஜிகே ரெட்டி தன்னை மீண்டும் அழைத்து வாய்ப்பு கொடுத்திருக்கிறார், ஆதலால் ஜிகே ரெட்டியின் மகனை வைத்துத்தான் இந்த படத்தை நாம் இயக்க வேண்டும் என முடிவு செய்தாராம். அதற்கு அடுத்த நாள் சி.வி.ராஜேந்திரனை சந்தித்து, “எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் ஜிகே ரெட்டி. ஆதலால் நான் அவர் மகனை வைத்தே இயக்குகிறேன். அவருக்கு துரோகம் செய்ய என்னால் முடியாது” என கூறினாராம். இவ்வாறு சிவாஜி கணேசனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அஜித்தை தொட்டுவிட்டு சென்றிருக்கிறது.

சற்று முன்