- Advertisement -
Homeபொழுதுபோக்குசிறந்த இயக்குனர் தேசிய விருது - தமிழ் சினிமாவில் இந்த முறை வெல்லப் போகும்...

சிறந்த இயக்குனர் தேசிய விருது – தமிழ் சினிமாவில் இந்த முறை வெல்லப் போகும் புதுமுக இயக்குனர் யார்? – அட இவங்களா… இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு!

- Advertisement -

மத்திய மற்றும் மாநில அரசுகள், திரைப்படத்துறை மற்றும் கலை அமைப்புகள் பிரபல முன்னணி பத்திரிகைகள் உள்ளிட்டவை சார்பில் சிறந்த ஆற்றல் மிக்க கலைஞர்களுக்கு விருதுகள் பட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த பல காலமாக ஆண்டுதோறும் மத்திய அரசு தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல்வேறு மொழி சார்ந்த சினிமா படைப்புகளுக்கும் படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது.

கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் தேசிய விருதுகளை தமிழில் பல கலைஞர்கள் பெற்றுள்ளனர். அந்த வரிசையில் நடிகர் கமல்ஹாசன் 3 முறை சிறந்த நடிகர் தேசிய விருது பெற்றிருக்கிறார். இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் இதுவரை 7 முறை சிறந்த இசையமைப்பாளர் தேசிய விருது பெற்றிருக்கிறார். அதே போல் கவிஞர் வைரமுத்து 6 முறை சிறந்த பாடல் ஆசிரியராக தேசிய விருது பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த வரிசையில் ஆடுகளம் படத்துக்காக நடிகர் தனுஷ், சூரரைப் போற்று படத்துக்காக நடிகர் சூர்யா சிறந்த நடிகர் தேசிய விருது பெற்றிருக்கிறார்கள். சிறந்த துணை நடிகர் தேசிய விருதை நடிகர் பிரகாஷ் ராஜ் பெற்றுள்ளார். நடிகை லட்சுமி 3 முறை, நடிகை ஷோபனா 2 முறை சிறந்த நடிகை தேசிய விருதுகளை பெற்றிருக்கின்றனர்.

மேலும் நடிகைகள் பிரியாமணி ( பருத்திவீரன்) சரண்யா பொன்வண்ணன் ( தென்மேற்கு பருவக்காற்று) அர்ச்சனா ( வீடு) சுஹாசினி ( சிந்து பைரவி) ஷோபா ( பசி) போன்றவர்களும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான மத்திய அரசின் தேசிய விருதை பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்த அப்புக்குட்டி சிறந்த துணை நடிகர் தேசிய விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அந்த வரிசையில் இப்போது இந்திய அரசு வழங்கும் தேசிய விருது இறுதிப் பட்டியலில் 2 இயக்குனர்களின் பெயர்கள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஒருவர் பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் என்பதும் மற்ற ஒருவர் போர்த்தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா என்பதும் உறுதியாகி உள்ளது. இந்த 2 பேரில் ஒருவர்தான் இந்த முறை சிறந்த இயக்குனர் தேசிய விருது வெல்லப் போகிறார்கள்.

கடந்தாண்டில் வெளியான பார்க்கிங் மற்றும் போர்த்தொழில் என 2 படங்களுமே ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அதிக வரவேற்பை பெற்ற முக்கிய படங்களாக இருந்தன. 2 படங்களுமே வித்யாசமான கதைக்களத்தில் விறுவிறுப்பான காட்சிகளை கொண்ட படமாகவும் ரசிகர்களை கவர்ந்தன. இதில் மற்றொறு முக்கிய அம்சம் என்னவென்றால் இவர் இருவருமே அறிமுக இயக்குனர்களாக அந்த படங்களை தங்களது முதல் படங்களாக இயக்கியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்