- Advertisement -
Homeபொழுதுபோக்குதர்மன் படத்தில் நடிக்க கமிட் ஆன விஜய் பட நடிகை, அப்போ மொத்தம் 3 நாயகிகளா?...

தர்மன் படத்தில் நடிக்க கமிட் ஆன விஜய் பட நடிகை, அப்போ மொத்தம் 3 நாயகிகளா? தரமான சம்பவத்தை லோடு செய்யும் அஸ்வத் மாரிமுத்து!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் நடிப்பது மட்டுமின்றி இயக்குனர் தயாரிப்பாளர் பாடகர் கவிஞர் நடனக் கலைஞர் திரைக்கதை ஆசிரியர் வசனகர்த்தா என பன்முக தன்மை கொண்டவர். மேலும் விஜய் டிவியில் பிக்பாஸ் தொகுப்பாளராகவும் 7 ஆண்டுகள் தன் திறமையை வெளிப்படுத்தியவர். மக்கள் நீதிமய்யம் என்ற அரசியல் கட்சியின் தலைவராகவும் ராஜ்யசபா எம்பி ஆகவும் இருந்து வருகிறார்.

நடிகர் கமல்ஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பல திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். அவர் நடிக்கும் சொந்த படங்கள் மட்டுமின்றி பிற ஹீரோக்களின் படங்களையும் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சத்யராஜ் நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்தை தயாரித்தது கமல்தான்.

- Advertisement -

அதே போல் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தையும் இப்போது அவர் நடித்து வரும் சேயோன் படமும் தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ்தான். ஆனால் முதன் முறையாக நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனத்தில் அவரது நெருங்கிய நண்பர் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். 40 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு அபூர்வ நிகழ்வு அவர்களுக்கு நடந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் டாக்டர் கேரக்டரில் நடிக்கும் தர்மன் படத்தை டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில் நடிகை சிம்ரன் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் நடிகை ராஷி கண்ணாவும் இந்த படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இப்போது இன்னொரு நடிகையும் இந்த படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

- Advertisement -

அவர் நடிகை மீனாட்சி சவுத்ரி என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே நடிகர் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் மற்றும் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் போன்ற படங்களில் நடித்தவர். தெலுங்கில் நடிகர் வெங்கடேஷூடன் சங்கராந்தி வஸ்துனம் படத்திலும் நடித்திருந்தார். இதில் ஐஸ்வர்யா ராஜேூம் ஒரு நாயகியாக நடித்திருந்தார்.

இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருந்த ஒரு படத்தில் கதாநாயகியாக கமிட் செய்யப்பட்டவர் தான் மீனாட்சி சவுத்ரி. ஆனால் இப்போது பிரதீப் ரங்கநாதன் படத்தை இயக்குவது தள்ளிப் போனதால் அந்த படத்தில் நடிக்க கமிட் ஆன மீனாட்சி சவுத்ரியை தர்மன் படத்தில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து நடிக்க கமிட் செய்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்