- Advertisement -
Homeபொழுதுபோக்குதக் லைப் படத்திற்காக செம பிளான் போட்ட மணிரத்னம்... சென்னையில் சந்திக்கப் போகும் மூன்று...

தக் லைப் படத்திற்காக செம பிளான் போட்ட மணிரத்னம்… சென்னையில் சந்திக்கப் போகும் மூன்று நடிகர்கள்…

- Advertisement -

1987 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான நாயகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்தில் வேலு நாயக்கராக வாழ்ந்த கமல்ஹாசன் தேசிய விருதையும் பெற்றார். இளையராஜாவின் இசை, மணிரத்னத்தின் அசத்தலான திரைக்கதை, காட்சியமைப்பு என அனைத்தும் பக்காவாக இருந்ததால் நாயகன் திரைப்படம் இன்று வரை பேசப்படுகிறது.

 

இந்நிலையில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு, தக் லைப் திரைப்படத்திற்காக மீண்டும் கமல்ஹாசன் மணிரத்னம் ஆகியோர் இணைந்துள்ளனர். இதனை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.

 

இந்தப் படத்தில் முதலாவதாக, துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இருவரும் படத்திலிருந்து விலகினர். இதனைத் தொடர்ந்து படத்தில் சிம்பு சேர்க்கப்பட்டார். இதே போல் அசோக் செல்வமும் படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

 

தக் லைப் படத்தில் சிம்பு இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் அவர் கமலுக்கு மகனாக வருவதாகவும், காவல்துறை அதிகாரி என்றும் சிலர் கூறுகிறார்கள். கேங்ஸ்டர் பாணியில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.

 

அதுமட்டுமல்லாமல், திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக், நாசர், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இதன் படபிடிப்பு முதலில் செர்பியா நாட்டில் நடைபெற்றது. பிறகு, டெல்லி, ஜெய்சால்மர் பகுதிகளிலும் இதன் சூட்டிங் நடத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்ததாக சென்னையில் ஷூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

மொத்தம் 17 நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறதாம். கமல்ஹாசன், அசோக் செல்வன், சிம்பு ஆகியோ தொடர்பான காட்சிகள் இங்கு படமாக்கப்பட உள்ளது. விறுவிறுப்பாக இதன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டிற்குள் படத்தை வெளியிட மணிரத்னம் திட்டமிட்டிருக்கும் நிலையில், ஏ ஆர் ரஹ்மானும் இசையமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.

 

சற்று முன்