- Advertisement -
Homeபொழுதுபோக்குமாநாடு படத்தை உள்ளே புகுத்திய வெங்கட் பிரபு, அசந்துப்போன விஜய்- தளபதி 68 படத்தின் அப்டேட்டுகளை...

மாநாடு படத்தை உள்ளே புகுத்திய வெங்கட் பிரபு, அசந்துப்போன விஜய்- தளபதி 68 படத்தின் அப்டேட்டுகளை அள்ளித்தெளித்த பத்திரிக்கையாளர்

- Advertisement -

“லியோ” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தனது 68 ஆவது திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார். “தளபதி 68” திரைப்படத்தில் விஜய் வயதான தந்தை கதாபாத்திரத்திலும் இளம் வயது மகன் கதாபாத்திரத்திலும் நடிக்கிறாராம்.

இதில் வயதான தந்தை கதாபாத்திரத்தை தத்ரூபமாக காட்சிப்படுத்துவதற்காக அமெரிக்காவில் உள்ள Institute of creative technology என்ற மையத்திற்கு சென்று அங்கே விஜய்யின் உடலை ஸ்கேன் செய்துள்ளார்களாம். இது குறித்த புகைப்படங்களை இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொண்டனர்.

இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் “தளபதி 68” திரைப்படத்தின் கதை குறித்தான ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது வெங்கட் பிரபு, முதலில் விஜய்யிடம் ஒரு கதையை கூறினாராம். தந்தை விஜய் ஒரு ரா ஏஜெண்ட், மகன் விஜய் ஒரு தீவிரவாதி. இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். இரண்டு பேருமே என்ன வேலை செய்கிறார்கள் என இருவருக்குமே தெரியாது. ஒரு கட்டத்தில் தெரிய வரும்போது என்ன நடக்கிறது என்பதுதான் கதை என்று வெங்கட் பிரபு விஜய்யிடம் கூறியிருக்கிறார்.

அதற்கு விஜய், “இந்த கதை பழசாக இருக்கிறது. இதை கொஞ்சம் மாற்றுங்கள்” என கூறினாராம். விஜய் கூறியதற்கு ஏற்ப அந்த கதையில் சற்று மாற்றத்தை செய்தாராம் வெங்கட் பிரபு. அதாவது ஒரு தந்தையும் மகனும் இருக்கிறார்கள், தந்தை ரா ஏஜெண்டாக இருக்கிறார். மகன் சிறு வயதிலேயே காணாமல் போய்விடுகிறார்.

ரா ஏஜெண்ட்டாக இருக்கும் அப்பாவுக்கு ஒரு தீவிரவாதியை கண்டுபிடிக்க வேண்டும் என்ற டாஸ்க் வருகிறது. கடைசியில் அந்த தீவிரவாதியே தனது மகன்தான் என தெரிய வருகிறது. தனது மகனை கண்டுபிடிப்பதற்காக டைம் டிராவலில் தந்தை பயணம் செய்கிறார் என்பதுதான் கதை என்று வெங்கட் பிரபு கூறினாராம். அதற்கு விஜய், “என்ன மாநாடு படத்தை வந்து சொருகிறீங்க?” என கேட்டாராம்.

“மாநாடு” திரைப்படத்தின் தாக்கத்தை வைத்துத்தான் இந்த படத்தின் கதையை எழுதியதாக வெங்கட் பிரபு கூற விஜய் உடனே ஓகே சொல்லிவிட்டாராம். இவ்வாறு ஒரு தகவலை செய்யாறு பாலு பகிர்ந்துகொண்டார்.

சற்று முன்