- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் தலைவராக இருக்கும் வரை அதற்கு சம்மதிக்க மாட்டேன் - தமிழக முதல்வர் விஜய்க்கு ஆடியோ...

நான் தலைவராக இருக்கும் வரை அதற்கு சம்மதிக்க மாட்டேன் – தமிழக முதல்வர் விஜய்க்கு ஆடியோ மெசேஜ் செய்த திருப்பூர் சுப்ரமணியன்!

- Advertisement -

தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்கம் சார்பில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அதன் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் ஆடியோ வாயிலாக சில கோரிக்கைகளையும் முன் வைத்திருக்கிறார். வாட்ஸ் அப் மூலமாக அவர் அனுப்பிய பதிவில் கூறியிருப்பதாவது, தமிழக முதல்வராக விஜய் பதவி ஏற்றிருக்கிறார். நமது சங்கம் சார்பில் அவரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்களுக்கு அவர் பிஸியாக இருப்பார். அதனால் அடுத்த வாரம் அவரை சந்திக்கலாம் என்று கூறியிருக்கிறார்கள். ஆனாலும் அவரிடம் இப்போது சில கோரிக்கைகளை வைக்கிறோம். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கேளிக்கை வரி கிடையாது. முந்தைய ஆட்சிகளில் அது 30 சதவீதம் 18 சதவீதமாக இருந்தது. அடுத்து 8 சதவீதமாக இருந்தது. கடந்த திமுக ஆட்சியில் 4 சதவீதமாக குறைக்கப்பட்டது.

- Advertisement -

ஆனாலும் அதை கட்ட முடியாமல் இருக்கிறோம். அந்த 4 சதவீதத்தையும் தமிழக அரசு நீக்க வேண்டும். அதேபோல் தியேட்டர் உரிமையாளர்கள் மின்சார கட்டணம் கட்டவும் சிரமப்படுகின்றனர். தமிழகத்தில் இப்போது ஏஸி தியேட்டர் அதிகரித்துவிட்டது. அதனால் மற்ற சிறு குறு தொழில்களைப் போல சினிமா தியேட்டர்களுக்கும் குறைந்தபட்ச மின்சார கட்டணம் சலுகை கொடுக்க வேண்டும். இந்த 2 முக்கிய கோரிக்கைகளை வைக்கிறோம்.

தனி தியேட்டர் மல்டிபிளக்ஸ் ஆகியவற்றுக்கு ஒரே மாதிரியான மின்சார கட்டணம் இருக்கிறது. அதிலும் மாற்றம் வேண்டும். சில தியேட்டர்கள் உரிமையாளர்கள் டிக்கெட் உயர்வு வேண்டும் என்கிறார்கள். இப்போது 190 ரூபாய் அதிகபட்ச கட்டணமாக உள்ளது. மற்ற விலைகளிலும் விற்கப்படுகிறது. இப்போது சில தியேட்டர் உரிமையாளர்கள் அனைத்து தியேட்டர்களிலும் அனைத்து ஊர்களிலும் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்க வேண்டும் என்கிறார்கள். அது தவறு.

- Advertisement -

அப்படி செய்தால் ஒவ்வொரு நடிகரும் தயாரிப்பாளரும் 300 400 ரூபாய் என கட்டணம் வைப்பார்கள். அப்படி வந்தால் வட இந்தியா மாதிரி நமக்கும் தியேட்டர் பார்வையாளர்களுக்கும் எண்ணிக்கை குறையும். என்னை பொறுத்தவரையில் 8 ஆண்டுகளாக அதிகபட்சமாக 190 ரூபாய் என்ற கட்டணமாக இருக்கிறது. அதில் மாற்றமில்லை. அதிகபட்சமாக 200 ரூபாய் வைக்கலாம்.

மற்றபடி அதிக விலை கூடாது. வழக்கம்போல் 100 ரூபாய் உட்பட விலையிலும் டிக்கெட் விற்கப்படவேண்டும். தியேட்டர் டிக்கெட் விலை உயர்வுக்கு அனைத்து படங்களுக்கும் அனைத்து தியேட்டர்களுக்கும் ஒரே டிக்கெட் விலை என்ற கோரிக்கைக்கு நான் தலைவராக இருக்கும் வரை சம்மதிக்க மாட்டேன் என்று திருப்பூர் சுப்ரமணியன் அந்த ஆடியோவில் கூறியிருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்