- Advertisement -
Homeபொழுதுபோக்குஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் 45வது படம், அந்த நாளில் டைட்டில்...

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் 45வது படம், அந்த நாளில் டைட்டில் டீசர் வெளியிட முடிவு – அதுதான் டைட்டிலா பாஸ்?

- Advertisement -

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு படத்தில் ஒரு ஹீரோ நடிக்க கமிட் ஆகி விட்டார் என்றாலே முதலில் அந்த படத்தின் டைட்டில்தான் முக்கிய தகவலாக வெளியாகும். ரசிகர்கள் அந்த டைட்டிலை கேட்டு சந்தோஷப்படுவர். அதன்பிறகுதான் படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் யார் என்ற அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும்.

ஆனால் இப்போதெல்லாம் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கும் வரை படத்தின் டைட்டிலை வெளியிடாமல் ரகசியம் காக்கின்றனர். இதில் கடைசி வரை சஸ்பென்ஸ் வைத்து இயக்குனர் என்ன செய்யப் போகிறார் என்பதே தெரியவில்லை. முகம் தெரிந்த ஒருவருக்கு பெயரில்லாததை போல ஒரு படத்தின் ஷூட்டிங் முடியும் வரை படத்தின் தலைப்பை முடிவு செய்யாமலேயே படத்தை இயக்கி விடுகின்றனர்.

- Advertisement -

இதற்காக அந்த நடிகருக்கு எத்தனையாவது படம் என்பதை கணக்கில் வைத்து உதாரணமாக ரஜினி 170 கமல் 237 விஜய் 69 சூர்யா 45 தனுஷ் 48 என இப்படி எண்களில் குறிப்பிடுகின்றனர். இது படப்பிடிப்பை துவங்கும் போதோ, படத்தின் ஷூட்டிங் நடக்கும் சில வாரங்களுக்கோ என்றால் சரிதான். ஆனால் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடியும் வரை இந்த சஸ்பென்ஸ் எதற்காக என்றே தெரியவில்லை.

அதிலும் நடிகர் சிவகார்த்திகேயன் போன்ற ஹீரோ படம் என்றால் பெரும்பாலும் பழைய பட டைட்டிலை தான் எப்படியும் வைக்கிறார்கள். இதற்கு எதற்கு இறுதி வரை சஸ்பென்ஸ் வைத்து ரசிகர்களை கடுப்பேற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. அந்த வரிசையில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் புதிய படத்துக்கு சூர்யா 45 என டைட்டில் வைத்து கடந்த 6 மாதங்களாக ஷூட்டிங் நடத்தி வருகின்றனர். ஆனால் டைட்டில் இன்னும் சூர்யா 45 தான்.

- Advertisement -

இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தில் சூர்யாவுடன் திரிஷா நாயகியாக நடித்துள்ளார். மேலும் சுவாசிகா இந்திரன்ஸ் யோகி பாபு ஷிவதா சுப்ரீத் ரெட்டி அனகா மாயா ரவி நட்டி நடராஜ் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சூர்யா வக்கீல் கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் கிடைத்துள்ளது. வருகிற ஜூலை மாதம் 23ம் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்த நாளில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சூரி 45 படத்தின் டைட்டிலை வெளியிடப்பட படக்குழு முடிவு செய்திருக்கிறது. அய்யனார் கருப்பண்ணசாமி கதை என்பதால் இந்த படத்துக்கு வேட்டை கருப்பு என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்