- Advertisement -
Homeபொழுதுபோக்குபிளாக்பஸ்டர் படமாக ஜெயித்துக்காட்டிய டூரிஸ்ட் ஃபேமிலி… உலகளவில் மொத்தமாக வசூலித்தது எவ்வளவு? - வெளியான அதிகாரபூர்வ...

பிளாக்பஸ்டர் படமாக ஜெயித்துக்காட்டிய டூரிஸ்ட் ஃபேமிலி… உலகளவில் மொத்தமாக வசூலித்தது எவ்வளவு? – வெளியான அதிகாரபூர்வ தகவல்!

- Advertisement -

நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை எப்போதுமே தமிழ் சினிமா ரசிகர்கள் கைவிட்டது இல்லை. கதை சிறப்பானதாக இருந்தால் திரைக்கதை உயிரோட்டமாக இருந்தால் அந்த படத்தை ஜெயிக்க வைப்பதுதான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பழக்கமாகவும் வழக்கமாகவும் இருக்கிறது. அப்படி தான் பல சின்ன பட்ஜெட் படங்கள் பெரிய அளவில் ஜெயித்திருக்கின்றன.

காக்கா முட்டை பார்க்கிங் சித்தா குட்நைட் லப்பர் பந்து குடும்பஸ்தன் படங்களில் வரிசையில் இப்போது மாஸ் வெற்றியை பெற்ற ஒரு படம் டூரிஸ்ட் ஃபேமிலி. சசிக்குமார் சிம்ரன் கணவன் மனைவியாக நடித்த இந்த படத்தில் நடித்த மற்ற எல்லா நடிகர் நடிகைகளுமே பெரிய அளவில் நட்சத்திர கலைஞர்களாக இல்லை.

- Advertisement -

யோகிபாபு எம்எஸ் பாஸ்கர் இளங்கோ குமரவேல் பகவதி பெருமாள் ரமேஷ் திலக் தவிர மற்றவர்கள் எல்லாம் ரசிகர்களுக்கு அறிமுகமே இல்லாதவர்களாக தான் இருக்கின்றனர். ஆனாலும் அந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 15 கோடி ரூபாய் என்றும் சொல்லப்படுகிறது.

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை 24 வயதான புதுமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கி இருந்தார். முதல் படத்திலேயே தனது முத்திரையை பதித்து விட்டார். நடிகர்கள் ரஜினிகாந்த் சிவகார்த்திகேயன் சிம்பு தனுஷ் என பலரும் பாராட்டிய நிலையில், பாகுபலி பட இயக்குனர் ராஜமெளலி இந்த படத்தை வெகுவாக பாராட்டி இயக்குனருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த படத்தின் அபார வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை உயர்த்த போவது இல்லை என்று நடிகர் சசிக்குமார் வெளிப்படையாக மேடையில் கூறினார். ஏனெனில் எனக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. அதை விட சந்தோஷம் வேறு இல்லை என்றும் கூறியிருந்தார். இப்போது டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மொத்த வசூல் நிலவரம் குறித்த தகவல் அதிகாரபூர்வமாக வெளியாகி உள்ளது.

மொத்தம் ரூ. 15 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் உலகளவில் மொத்தம் 91 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 76 கோடி ரூபாய், வெளிநாடுகளில் 15 கோடி ரூபாய் என வசூல் சாதனை புரிந்திருக்கிறது. இந்த ஆண்டில் பாக்ஸ் ஆபீஸில் பிளாக்பஸ்டர் மூவி என்ற அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் டூரிஸ்ட் ஃபேமிலி படம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்