- Advertisement -
Homeபொழுதுபோக்குடாக்ஸிக் படத்துக்கு எதிராக ரசிகர்கள் கடும் விமர்சனம் - யூடியூப்பர்களுக்கு எச்சரிக்கை, 2வது நாளில்...

டாக்ஸிக் படத்துக்கு எதிராக ரசிகர்கள் கடும் விமர்சனம் – யூடியூப்பர்களுக்கு எச்சரிக்கை, 2வது நாளில் வேகமாக சரிந்த வசூல்!

- Advertisement -

கன்னட மொழியில் வெளியான கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் 2 படங்களின் மூலம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் யஷ். இந்த படங்கள் பெரிய அளவில் வசூலை குவித்தன. இதையடுத்து யஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டாக்ஸிக் திரைப்படம் கடந்த 26ம் தேதி வெளியானது.

முதல் நாளில் இந்த படம் 140 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், இரண்டாவது நாளில் இந்த படத்தின் வசூல் 75 சதவீதத்துக்கு மேல் குறைந்து சரிவடைந்துள்ளது. இது படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் கடந்த 26ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

- Advertisement -

முதல் நாளில் இந்திய அளவில் 101.10 கோடி ரூபாய் வசூலை அள்ளியது. உலக அளவில் 140 கோடி ரூபாய் வசூலை முதல் நாளில் டாக்ஸிக் படம் எட்டியது. இருப்பினும் தொடர்ந்து டாக்ஸிக் படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வெளியானது. இந்த படத்தை யாரும் பார்க்க போகாதீங்க என படம் பார்த்த ரசிகர்கள் எச்சரித்து வீடியோ வெளியிட்டனர்.

மேலும் திரை விமர்சகர்கள் பலரும் இந்த படத்தை கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர். ஹை பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிட்டு படம் என்றும் விமர்சித்துள்ளனர். இதையடுத்து 2வது நாளான நேற்று டாக்ஸிக் படத்தின் மொத்த வசூல் ரூ. 22.08 கோடியாக மட்டுமே இருந்தது. 75 சதவீதத்துக்கு மேல் படத்தின் வசூல் கணிசமாக குறைந்தது.

- Advertisement -

இந்தியில் அதிகபட்சமாக ரூ.14.15 கோடி ரூபாய் எட்டியுள்ளது. கன்னடத்தில் 5.51 கோடி ரூபாயும் தெலுங்கில் 1.40 கோடி ரூபாயும் தமிழில் 72 லட்சம் ரூபாய் மலையாளத்தில் 30 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. இதன் மூலம் இரண்டு நாட்கள் முடிவில் இந்தியாவில் டாக்ஸிக் படத்தின் மொத்த வசூல் 123.18 கோடி ரூபாய் என்றும் மொத்தமாக உலகளவில் 146.80 கோடி ரூபாயும் எட்டியுள்ளது.

டாக்ஸிக் படத்தில் யஷ் உடன் நடிகைகள் நயன்தாரா கியாரா அத்வானி தாரா சுதாரியா ருக்மணி வசந்த் ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. இன்றும் நாளை சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர். இதற்கிடையே இந்த படத்துக்கு எதிராக விமர்சனம் செய்த யூடியூப்பர்களுக்கு டாக்ஸிக் பட நிறுவனத்திடம் இருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு எச்சரித்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்