நயன்தாரா தற்போது தென்னிந்தியாவின் டாப் நடிகையாக வலம் வந்தாலும் அவர் திரைப்படங்களில் நடிப்பதை சற்று குறைத்துக்கொண்டார் என்றே பலரும் கூறுகின்றனர். ஷாருக்கானின் “ஜவான்” திரைப்படத்தில் நயன்தாரா நடித்துள்ள நிலையில் தற்போது “டெஸ்ட்”, “இறைவன்” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதே போல் “பூரணி” என்ற திரைப்படத்திலும் நயன்தாரா நடித்து வருவதாக கூறப்படுகிறது.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி கடந்த வருடம் இரட்டை ஆண் குழந்தைகளை வாடகை தாய் மூலம் பெற்றுக்கொண்டனர். இரட்டை குழந்தைகளுக்கு தாயான பின் நயன்தாரா திரைப்படங்களில் நடிப்பதில் சற்று கடினமாக உணர்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நயன்தாரா தற்போது ஒரு புதிய கண்டிஷனை போட்டுள்ளாராம். அதாவது குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்காக வெளியூர் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ள மறுக்கிறாராம். வெளியூரில் படப்பிடிப்பு வைத்தால் டூப் போட்டு எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிடுகிறாராம். தற்போது அவர் நடித்து வரும் “பூரணி” திரைப்பட குழுவினரிடம் இந்த கண்டிஷனை போட்டிருக்கிறார். இதனால் முழி பிதுங்கி நின்றனராம் படக்குழுவினர்.

அதே போல் நயன்தாரா தனது ஒப்பந்தப் பத்திரத்திலேயே இது போன்ற கண்டிஷனை குறிப்பிட்டுத்தான் படங்களில் ஒப்பந்தமாகிறாராம். ஆனால் “பூரணி” படக்குழுவினர் திருச்சியில் சில காட்சிகளை படமாக்குவதற்காக கிளம்பியபோது நயன்தாரா இப்படி சொல்லியிருக்கிறார். ஆதலால் வேறு வழியில்லாமல் நயன்தாரா தவிர்த்து மற்ற அனைவரும் திருச்சிக்கு சென்று படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பி வந்து, தற்போது நயன்தாராவை வைத்து படமாக்கி வருகிறார்களாம். நயன்தாரா இவ்வாறு கண்டிஷன் போடுவது அவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு சிக்கலாக இருப்பதாக கூறப்படுகிறது.





