- Advertisement -
Homeபொழுதுபோக்குகார்த்தி நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகி நயன்தாராவா திரிஷாவா? - இயக்குனர் மோகன் ராஜா எடுத்த...

கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகி நயன்தாராவா திரிஷாவா? – இயக்குனர் மோகன் ராஜா எடுத்த அதிரடி முடிவு!

- Advertisement -

நடிகர் கார்த்தி இப்போது மார்ஷல் சர்தார் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக கார்த்தி நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் மோகன்ராஜா டைரக்ட் செய்கிறார். இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

தமிழ் சினிமாவில் ஜெயம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன்ராஜா. நடிகர் ரவிமோகனனின் சொந்த அண்ணன். தனி ஒருவன் ஜெயம் சந்தோஷ் சுப்ரமணியம் உனக்கும் எனக்கும் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி வேலைக்காரன் என பல சூப்பர் ஹிட் படங்களை தந்தவர்.

- Advertisement -

அடுத்ததாக திரு இயக்கத்தில் நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் ஒரு படத்தில் மோகன் ராஜா வில்லனாக நடிப்பதாகவும் சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இப்போது அதற்கிடையே நடிகர் கார்த்தி நடிக்கும் இந்த படத்தை மோகன் ராஜா இயக்க கமிட் ஆகியிருக்கிறார்.

ஏற்கனவே மோகன்ராஜா இயக்கத்தில் உருவான தனி ஒருவன் வேலைக்காரன் படங்களில் ஜெயம் ரவிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஜோடியாக நடித்தவர் நயன்தாரா. மேலும் காஷ்மோரா படத்திலும் கார்த்தியுடன் நயன்தாரா நடித்திருக்கிறார். அதனால் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க திட்டமிடப்பட்டது.

- Advertisement -

ஆனால் லேட்டஸ்ட் தகவலின்படி இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவில்லை. நடிகை திரிஷா தான் நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத் தேவனாக கார்த்தியும் குந்தவை தேவியாக திரிஷாவும் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த காம்போ பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் கார்த்தி – திரிஷா ஜோடி மீண்டும் இணைய உள்ளது. மேலும் இந்த படத்துக்கு ஹிப் ஆப் ஆதி இசையமைக்க உள்ளார். அவரது மீசைய முறுக்கு 2 பாடல்கள் செம வைரலான நிலையில் இந்த படத்துக்கு ஹிப் ஆப் ஆதியை இசையமைக்க படக்குழு கமிட் செய்திருக்கிறது.

- Advertisement -

சற்று முன்