- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ வெற்றி விழாவில் த்ரிஷா கொடுத்த விடாமுயற்சி அப்டேட்?.. தரமான சம்பவம் லோடிங்கோ

லியோ வெற்றி விழாவில் த்ரிஷா கொடுத்த விடாமுயற்சி அப்டேட்?.. தரமான சம்பவம் லோடிங்கோ

- Advertisement -

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் மெகா ஹிட்டானது. அதனையடுத்து தன்னுடைய 62ஆவது படத்தில் கமிட்டாகியிருக்கிறார் ஏகே. லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். அஜித்தின் பிறந்தநாளான மே ஒன்றாம் தேதி படத்தின் பெயர் விடாமுயற்சி என்று அறிவிக்கப்பட்டது.

அதற்கு பிறகு அப்டேட் என்றால் என்ன என்கிற அளவுக்கு படக்குழுவும், தயாரிப்பு தரப்பும் மௌனம் காத்துவருகின்றன. அதிலும் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட்டுக்கு எப்படி காத்திருந்தார்களோ அதைவிட மோசமான நிலைக்கு சென்றிருக்கின்றனர். ஒருகட்டத்தில் அவர்களே அலுத்துப்போயி அப்டேட் வரும்போது வரட்டும் என்ற விரக்தி மனநிலைக்கு சென்றதையும் காண முடிந்தது.

- Advertisement -

சூழல் இப்படி விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் இப்போது நடந்துவருவதாக கூறப்படுகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா இருக்கும் புகைப்படம் வெளியானது. அதை பார்க்கும்போது பாலைவனத்தில் ஆக்‌ஷன் காட்சியை படமாக்கிக்கொண்டிருந்ததுபோல் தெரிந்தது. அப்டேட் வரவில்லையென்றாலும் இதுபோன்ற புகைப்படமாவது வந்து ஷூட்டிங் நடப்பதை உறுதி செய்கிறதே என்று ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

ஷூட்டிங்கை விரைவில் முடித்து படத்தை வெளியிட மகிழ் திருமேனி மும்முரம் காட்டி வருகிறாராம். ஆனால் படப்பிடிப்பின்போதே கலை இயக்குநர் மிலனின் மரணம்; தன்னுடைய உடல்நிலை காரணமாக படப்பிடிப்புக்கு தினமும் இரண்டு மணி நேரம் அஜித் லேட்டாக வருவது என ஷூட்டிங் தாமதமாவதாக கூறப்படுகிறது. அஜர்பைஜான் ஷெட்யூலை இரண்டு மாதங்களுக்கு பிளான் செய்திருந்த மகிழ் தற்போது ஒரு மாதம் நீட்டிருப்பதாகவும் ஒரு தகவல் கோலிவுட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது.

- Advertisement -

இதற்கிடையே இந்தப் படத்தில் த்ரிஷா, ப்ரியா பவானி ஷங்கர், சஞ்சய் தத், ஆரவ் உள்ளிட்டோர் கமிட்டாகியிருப்பதாக தெரிகிறது. இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை எதுவும் வெளியே வரவில்லை. விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழாவில் த்ரிஷா பேசிய ஒரு விஷயம் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

அந்த விழாவில் பேசிய அவர், நானும் அர்ஜுன் சாரும் லக்கி. நாங்கள் இதுவரை 2 படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். அடுத்ததாகவும் ஒரு படத்தில் பணியாற்றுகிறோம். அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றார். த்ரிஷா இப்போது விடாமுயற்சி ஷூட்டிங்கில்தான் இருக்கிறார். எனவே இன்னொரு படம் என்று அவர் சொன்னது கண்டிப்பாக விடாமுயற்சியாகத்தான் இருக்கும் என்று கூறும் ரசிகர்கள் ஒருவேளை அர்ஜுன் அந்தப் படத்தில் நடித்தால் கண்டிப்பாக மங்காத்தா போல் மிகப்பெரிய வெற்றியடையும் என உறுதிபட கூற ஆரம்பித்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்