- Advertisement -
Homeபொழுதுபோக்குஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் மலையாள திரைப்படம், சொல்லி அடித்த கில்லியாக அசத்திய மோகன்லால் - கோட்டை...

ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் மலையாள திரைப்படம், சொல்லி அடித்த கில்லியாக அசத்திய மோகன்லால் – கோட்டை விட்டாரா உலகநாயகன்?

- Advertisement -

மொழிகளில், கலாசாரங்களில் மாறுபட்டிருந்தாலும் கலைக்கு அந்த பேதங்கள் ஏதுமில்லை. தமிழில் சிறந்த நடிகர்கள் இருப்பதை போல தெலுங்கில், மலையாளத்தில், கன்னடத்தில், இந்தியில், பெங்காலியில், உருதுவில் என எல்லா மொழிகளிலுமே சிறந்த கலைஞர்கள் நடிகர்களாக, இயக்குநர்களாக, இசையமைப்பாளர்களாக இருக்கின்றனர்.

அந்த வகையில் மலையாளத்தில் மோகன்லால் மிகச்சிறந்த நடிகர் என்பதை சிறிதும் சந்தேகமில்லை. அவரது நடிப்பாற்றலை பார்த்து வியந்துபோன கமல்ஹாசன், தனது உன்னைப்போல் ஒருவன் என்ற படத்தில், போலீஸ் கமிஷனர் கேரக்டரில் நடிக்க வாய்ப்பளித்தார். அதே போல் ரஜினியும் ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் மோகன்லாலை நடிக்க வைத்தார். பல விருதுகளை வென்ற மோகன்லால், நிகரற்ற ஒரு கலைஞனாக தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.

- Advertisement -

கடந்த 2013ம் ஆண்டில் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான படம் த்ரிஷியம். ஒரு படிப்பறிவில்லாத மனிதன், தனது புத்திசாலித்தனத்தால், பொருளாதாரத்தில் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்கிறான். ஒருகட்டத்தில் தன் பெண்ணுக்கு ஏற்படும் ஒரு பிரச்னை, குடும்பத்தையே பாதிக்கிறது. தனது சினிமா அறிவைக்கொண்டு அந்த பிரச்னையை முறியடிக்கும் அவனது புத்திசாலித்தனமே அந்த படத்தின் கதை.

மோகன்லாலின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனமே இந்த த்ரிஷியம் படத்தை தயாரித்தது. விமர்சன ரீதியாக கேரள மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலிலும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் என பிற மொழிகளிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது.

- Advertisement -

தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படத்தில் மோகன்லால், மீனா கேரக்டரில் கமல்ஹாசன் – கவுதமி நடித்திருந்தனர். தமிழிலும் பெரிய வெற்றியை பெற்ற இந்த படம், மற்ற மொழிகளிலும் ரசிகர்களின் அமோக ஆதரவை, வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சீன மொழியிலும், ஜப்பான் மொழியிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு, அந்த நாட்டு மக்கள் மத்தியிலும் இந்த படத்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

இதையடுத்து த்ரிஷியம் படம், ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது. அதாவது இந்திய சினிமா, ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்படுகிறது என்பது இந்திய சினிமாவுக்கு கிடைத்த பெருமையாக கருதப்படுகிறது. ஹாலிவுட்டில் கல்ப்கிளாசிக் நிறுவனம், மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்திடம் இருந்து, இதற்கான உரிமையை பெற்றுள்ளது. வரும் 5 ஆண்டுகளில் இன்னும் கூடுதலாக 10 மொழிகளில் இந்த படத்தை ரீமேக் செய்து வெளியிடும் திட்டமும் மோகன்லாலிடம் உள்ளது. ஆனால், கமல்ஹாசன் இந்த படத்தில் நடித்தும் இந்த யோசனையை எப்படி தவற விட்டார் என்பது கேள்வியாக எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்