நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கர. போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ்ராஜா இயக்கிய இந்த படத்தை வேல்ஸ் பிலிம் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவானது. மமிதா பைஜூ கேஎஸ் ரவிக்குமார் சுராஜ் வெஞ்சரமூடு ஜெயராம் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. வசூலும் மிகப்பெரிய ஏமாற்றத்தையே தந்துள்ளது. அந்த வகையில் கர படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷூக்கு ரூ. 350 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது, இதனால் படத்தின் நாயகன் தனுஷ், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இடையே ஒரு மனக்கசப்பு உருவாகி விட்டது.
இந்த சூழலில் ஏற்கனவே இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் ஒரு வரலாற்று கதைக்களத்தில் மன்னர் கால சம்பவங்களை பின்னணியாக கொண்ட ஒரு படத்தை ஐசரி கணேஷ் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளார். இந்த படத்திலும் நடிகர் தனுஷ்தான் நாயகனாக நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.
ஆனால் இப்போது கர படத்தின் நஷ்டம் காரணமாக தனுஷ் ஐசரி கணேஷ் இடையே ஒரு மோசமான இறுக்கமான சூழல் நிலவுவதால் இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிப்பாரா, அல்லது தனுஷ் இந்த படத்தில் நடிப்பாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் தனுஷ் நடிக்க இன்னும் சில மாதங்களே உள்ளன.
இந்நிலையில் வாழை 2 படம் எடுக்க தயாராகி விட்ட இயக்குனர் மாரி செல்வராஜ் அதற்கான பணிகளை துவங்கிவிட்டார். ஒருவேளை ஐசரி கணேஷ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படம் தள்ளிப் போகும் பட்சத்தில் வேறு ஒரு திட்டத்தை செயல்படுத்தவும் மாரி செல்வராஜ் முடிவு செய்திருக்கிறார்.
ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படத்தை இயக்கியவர் மாரி செல்வராஜ். இப்போது உதயநிதி மகன் இன்பன் உதயநிதி நடித்து ஹீரோவாக அறிமுகமாகும் படத்தையும் மாரி செல்வராஜ் தான் இயக்க உள்ளார். அந்த படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம்தான் தயாரிக்க உள்ளது. அதனால் தனுஷ் படம் தள்ளிப் போனால் இன்பன் உதயநிதி படத்தை இயக்க மாரி செல்வராஜ் திட்டமிட்டுள்ளார்.





