- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்று தவெக பொதுக்குழு கூட்டம் - உடுப்பி ஓட்டல் மெனு கார்டு மாதிரி லிஸ்ட் ரொம்பவும்...

இன்று தவெக பொதுக்குழு கூட்டம் – உடுப்பி ஓட்டல் மெனு கார்டு மாதிரி லிஸ்ட் ரொம்பவும் பெருசா இருக்குது… ஆனா நிம்மதியா சாப்பிட விடுவாங்களா?

- Advertisement -

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் நாளுக்கு நாள் அதிக கவனம் பெற்று வருகிறார். எம்ஜிஆர் விஜயகாந்துக்கு பிறகு தமிழக அரசியல் களத்தில் மக்களின் மத்தியில் பெரிய ஆர்வத்தை தூண்டும் ஒரு நட்சத்திர அரசியல் தலைவராகவும் விஜய் உருவாகி வருகிறார். நிச்சயமாக விஜயின் வருகை, அரசியல் தேர்தல் களத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

அதே நேரத்தில் அதிமுக திமுக காங்கிரஸ் பாஜக கம்யூனிஸ்ட் கட்சிகள் விடுதலை சிறுத்தைகள் தேமுதிக பாட்டாளி மக்கள் கட்சி மறுமலர்ச்சி திமுக என எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேராமல் நடிகர் விஜய் தனியாக தேர்தல் களத்தில் நின்றால் மட்டுமே மக்களின் பூரண வரவேற்பை பெற முடியும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

திமுகவை அரசியல் எதிரி என்றும் பாஜகவை கொள்கை ரீதியான எதிரி என்றும் கூறி வரும் தவெக தலைவர் விஜய், எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து நின்று களம் காண்பதே அவருக்கு பெரும்பான்மையான வெற்றியை தேடித்தரும். மற்ற கட்சிகளின் ஆதரவை நாடினால் அவரும் பத்துடன் பதினொன்று கணக்கில் வந்து விடுவார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்த சூழலில் இன்று சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் தலைவர் விஜய் தலைமையில் நடக்கிறது. புஸ்லி ஆனந்த் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் என கட்சியினர் பங்கேற்க உள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் தவெக பொதுக்குழுவில் பங்கேற்கும் கட்சியினருக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி காலை உணவாக 500 பேருக்கு பொங்கல் வடை சட்னி சாம்பார் டீ என வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மதியம் 2500 பேருக்கு சுடச்சுட மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அதில் மால் பூவா ஸ்வீட் வெஜ்சூப் ஊறுகாய் இஞ்சி துவையல் தயிர் பச்சடி சப்பாத்தி பன்னீர் பட்டர் மசாலா வெஜ் மட்டன் பிரியாணி சாதம் சைவ மீன்குழம்பு சாம்பார் மிளகுரசம் இறால் 65 அவியல் ஆனியன் மணிலா பக்கோடா உருளைபட்டாணி வறுவல் தயிர்வடை அப்பளம் வெற்றிலை பாயாசம் மோர் ஐஸ்கிரீம் என மதிய உணவில் 21 வகைகள் பரிமாறப்படுகிறது. இதையறிந்த கட்சியின் சந்தோசத்தில் உள்ளனர். ஆனால் கடந்த முறை போன்று நின்று கொண்டே சாப்பிட வைக்காமல் இருக்கையில் உட்கார வைத்து உணவு பரிமாறினால் நன்றாக இருக்கும் என்று கட்சி நிர்வாகிகள் புலம்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்