- Advertisement -
Homeபொழுதுபோக்குமகாராஜா 2 படம் உருவாக்க தயாரான நித்திலன் சுவாமிநாதன் - விஜய் சேதுபதி; ஆனா ரசிகர்கள்...

மகாராஜா 2 படம் உருவாக்க தயாரான நித்திலன் சுவாமிநாதன் – விஜய் சேதுபதி; ஆனா ரசிகர்கள் எதிர்பாக்கறது அதுல இல்லே – வெளியான லேட்டஸ்ட் தகவல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இப்போது அவர் நடிப்பில் தலைவன் தலைவி ஏஸ் மற்றும் டிரெயின் ஆகிய 3 படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கின்றன. இதில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான தலைவன் தலைவி படத்தில் பரோட்டா மாஸ்டர் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்பட்ட படம் ஏஸ். இந்த படமும் விரைவில் வெளியாக உள்ளது. அதே போல் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள டிரெயின் படமும் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. கோவையில் இருந்து சென்னை வரும் ரயிலில் நடக்கும் சம்பவங்களே இந்த படத்தின் மையக்கதை.

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதியை பொருத்த வரை எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் அதில் பிசிறு தட்டாத சிறப்பான அழுத்தமான நடிப்பை தந்து வருகிறார். பேட்ட விக்ரம் மாஸ்டர் ஜவான் போன்ற சில படங்களில் வில்லனாகவும் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார். கேமியோ ரோலிலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

கடந்த ஆண்டில் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 50வது படம் மகாராஜா வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. சீன மொழியில் வெளியான மகாராஜா படம் ரூ. 90 கோடிக்கு மேல் வசூலித்தது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இந்த படத்தை 2 கோடிக்கு மேல் பார்வையாளர்கள் பார்த்ததாக சொல்லப்பட்டது.

- Advertisement -

மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியுடன் நட்டி நடராஜ் முனிஷ்காந்த் அருள்தாஸ் மம்தா மோகன்தாஸ் சாச்சனா அபிராமணி வில்லன் கேரக்டரில் இந்தி நடிகர் அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில் நடிகர் சிங்கம் புலி நடிப்பு வேற லெவலில் இருந்தது. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்த நிலையில், விஜய் சேதுபதிக்கு சூப்பர் கம்பேக் கொடுத்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் விஜய் சேதுபதி இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா 2 படம் உருவாகிறது. ஆனால் படப்பிடிப்பு துவங்க இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்று சொல்லப்படுகிறது. மகாராஜா 2ம் பாகம் என்றாலும், இது புத்தம் புதிய கதை, ரசிகர்கள் நினைப்பது போல கடந்தாண்டு வெளியான மகாராஜா படத்தின் தொடர்ச்சியாக இருக்காது என்ற புதிய தகவலும் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்