- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு - தமிழக முதல்வராக விஜய் தொடர அதிரடியாக களம் இறங்கிய...

தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு – தமிழக முதல்வராக விஜய் தொடர அதிரடியாக களம் இறங்கிய முன்னணி அரசியல் கட்சி!

- Advertisement -

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டணி கட்சிகளின் ஆதரவால் ஆட்சியமைத்தது. இந்த கட்சிகள் அனைத்தும் திமுக கூட்டணியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இன்று தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி தொடர்வது குறித்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதை தமிழக முதல்வர் விஜய் முன்மொழிந்தார். சபாநாயகர் ஜேடிசி பிரபாகர் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை தலைமையேற்று நடத்தினார்.

- Advertisement -

இதில் திமுக கட்சி வெளிநடப்பு செய்த நிலையில் தவெக கட்சிக்கு ஆதரவு அளித்த திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 5 இந்திய யூனியன் முஸ்லிம்லீக் 2 விடுதலை சிறுத்தைகள் 2 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 என மொத்தம் 13 கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்தன.

ஒரு உறுப்பினரை மட்டுமே கொண்ட தேமுதிக கட்சி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 4 உறுப்பினர்களை கொண்ட பாமக கட்சி இந்த வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாமல் விலகிக்கொண்டது. ஒரு உறுப்பினரை கொண்ட பாஜக கட்சியும் நடுநிலமை வகித்தது. இந்நிலையில் அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

- Advertisement -

ஆனால் அவரது தரப்பில் 22 அதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்த நிலையில் எஸ்பி வேலுமணி சிவி சண்முகம் தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் முதல்வர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். இது மிகப்பெரிய திருப்பமாக மாறியது. மேலும் அமமுக எம்எல்ஏ காமராஜூம் தவெக கட்சிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், மொத்தம் 144 எம்எல்ஏக்களின் ஆதரவு தவெக கட்சிக்கு கிடைத்தது.

கடைசி நேரத்தில் அதிமுக இரண்டாக பிளவுபட்டு 25 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் 118 ஆதரவு நிலையை விட 144 ஆதரவுடன் தவெக அறுதி பெரும்பான்மையை நிரூபித்து சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. பிறகு தமிழக முதல்வர் விஜய் தன்னை வெற்றி பெறச் செய்த உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார். சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார்.

- Advertisement -

சற்று முன்