- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்… திடீரென முடிவை மாற்றிக்கொண்ட தயாரிப்பாளர் - வினியோகஸ்தர்களுக்கும் பச்சைக்கொடி!

ஜனநாயகன் வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்… திடீரென முடிவை மாற்றிக்கொண்ட தயாரிப்பாளர் – வினியோகஸ்தர்களுக்கும் பச்சைக்கொடி!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் இப்போதைக்கு ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என்று 99 சதவீதம் உறுதியாகி விட்டது. ஏனெனில் மீண்டும் தனி நீதிபதி இந்த வழக்கை எடுத்து மீண்டும் ஆரம்பத்தில் இருந்து விசாரணை நடத்தி சென்சார் போர்டு தரப்பின் வாதங்களை ஏற்று இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமில்லை என்பது தெளிவாகி விட்டது.

அதனால் ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிரடி முடிவு எடுத்து விட்டது. ஜனநாயகன் சென்சார் விவகாரம் குறித்த வழக்கை வாபஸ் பெறும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. மீண்டும் இந்த வழக்கு கோர்ட்டுக்கு வரும்போது நாங்கள் இந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்கிறோம் என்று தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்கிடையே மற்றொரு முக்கிய தகவலாக ஆரம்பத்தில் சென்சார் பிரச்னை ஏற்பட்ட போது கோர்ட்டுக்கு சென்று நீதி பெறலாம் என்று தயாரிப்பாளரிடம் யோசனை சொன்னதே நடிகர் விஜய் தானாம். ஆனால் அது இந்தளவுக்கு ஏடாகூடமாக மாறும் என்று தெரியாத நிலையில் இன்னும் இந்த விவகாரத்தை நீடிக்க கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் விரும்பவில்லை.

அதனால் தயாரிப்பு நிறுவனம் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ளும் நிலையில் இந்த படம் தணிக்கை குழுவின் மறு ஆய்வுக்கு செல்ல உள்ளது. அப்போது தணிக்கைக்குழு அதிகாரிகள் தரப்பில் என்னென்ன திருத்தங்கள் மாற்றங்கள் சொல்லப்படுகிறதோ அதை அப்படியே பின்பற்றி படத்துக்கு சான்றிதழ் பெறும் முடிவுக்கு தயாரிப்பு நிறுவனம் வந்துவிட்டது.

- Advertisement -

இதற்கிடையே ஜனநாயகன் படம் ரிலீஸ் மாதக்கணக்கில் தள்ளிப்போகும் சூழல் இப்போது ஏற்பட்டுள்ளதால் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் தரப்பில் அதிருப்தி நிலவுகிறது. கேரளாவில் இந்த படத்தை வெளியிட வாங்கிய வினியோகஸ்தர் பணத்தை திருப்பிக் கேட்ட நிலையில் தயாரிப்பு நிறுவனம் அவரிடம் வாங்கிய மொத்த தொகையையும் செட்டில் செய்துள்ளது.

அதே போல் தமிழ்நாடு உள்பட எந்த மாநிலத்தை சேர்ந்த வினியோகஸ்தராக இருந்தாலும் உங்களுக்கு படம் ரிலீஸ் ஆகும் வரை காத்திருக்க முடியாது என்றால் தாராளமாக நீங்கள் தந்த விலைக்கான பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் பச்சைக்கொடி காட்டி விட்டது. எனவே இனி ஜனநாயகன் படம் ரிலீஸ் எப்போது என்பது சென்சார் போர்டு கையில் மட்டுமே உள்ளது.

- Advertisement -

சற்று முன்