- Advertisement -
Homeபொழுதுபோக்குதள்ளிப் போன ஜனநாயகன் படம் ரிலீஸ் - விரக்தியடைந்த தளபதி ரசிகர்கள் - தயாரிப்பாளர் எடுத்த...

தள்ளிப் போன ஜனநாயகன் படம் ரிலீஸ் – விரக்தியடைந்த தளபதி ரசிகர்கள் – தயாரிப்பாளர் எடுத்த அதிரடி முடிவு!

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல்டைம். இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய இந்த படம் தி கோட் என்று சுருக்கமாக அழைக்கப்பட்டது. கடந்த 2024ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 5ம் தேதி இந்த படம் வெளியானது. கலவையான விமர்சனங்களுடன் இந்த படம் ரூ, 445 கோடி ரூபாய் வரை வசூலை அள்ளியது.

அதே நேரத்தில் 2024 ஆண்டில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூலை அள்ளிய முதலிடம் பிடித்ததும் அதுதான். கடந்த பல ஆண்டுகளாகவே நடிகர் விஜய் நடித்த படங்கள்தான் வசூலில் அதிகமான முதலிடத்தை பிடித்து வருகிறது. அதற்கு பிறகு விஜய் நடித்த படம்தான் ஜனநாயகன். கடந்த ஆண்டு தீபாவளிக்கு என திட்டமிட்ட இந்த படம் பொங்கலுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

- Advertisement -

ஏனெனில் பொங்கலுக்கு ஒரு வாரம் வரை தொடர் விடுமுறை வருகிறது. மேலும் தமிழக சட்டசபை தேர்தலுக்கும் சில மாதங்களே இருப்பதால் இந்த காலகட்டத்தில் ஜனநாயகன் படம் வருவது நல்ல ஒரு மாற்றமாக இருக்கும் என்றும் படக்குழு தரப்பில் திட்டமிடப்பட்டது. இன்று 9ம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸாக இருந்தது.

ஆனால் சென்சார் போர்டு தரப்பில் ஜனநாயகன் படத்துக்கு சான்றிதழ் தர தாமதித்த நிலையில் இதுகுறித்த வழக்கு கோா்ட்டில் நடந்தது. இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜனநாயகன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட நிலையில் சென்சார் போர்டு தரப்பில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதால் ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்வதில் மீண்டும் சிக்கல் நீடிக்கிறது.

- Advertisement -

இந்த சூழலில் நடிகர் விஜயின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் எஸ்எஸ் லலித்குமார். இவர் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியா நிறுவனத்தின் தயாரிப்பாளர். இவர்தான் நடிகர் விஜய் நடிப்பில் 2020ம் ஆண்டில் வெளியான மாஸ்டர் படத்தையும் 2023ம் ஆண்டில் வெளியான லியோ படத்தையும் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 2 படங்களையுமே இயக்கியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்ற நிலையில், மாஸ்டர் மற்றும் லியோ படங்களை ரி ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் லலித்குமார் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதையடுத்து இன்று பல்வேறு பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் லியோ படங்கள் ரி ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் ஜனநாயகன் படத்துக்கு பதிலாக இந்த படங்களை இன்று தளபதி ரசிகர்கள் தியேட்டர்களில் பார்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்