- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சிம்பு பட நாயகி? இதில் டிராகன் பட நடிகையும் போட்டிக்கு வருகிறாரா? போடு...

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சிம்பு பட நாயகி? இதில் டிராகன் பட நடிகையும் போட்டிக்கு வருகிறாரா? போடு வெடிய… தரமான சம்பவம் லோடு ஆகுது…

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சி படப்பிடிப்பு சமீபத்தில் இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்தில் நடந்தது. 15 நாட்களாக இரவு நேரங்களில் நடத்தப்பட்ட இந்த ஷூட்டிங்கில் சிவகார்த்திகேயன் சண்டை காட்சிகளில் நடித்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார்.

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் பல ஹிட் படங்களை கொடுத்தவர் என்றாலும் அவரது இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் மிகப்பெரிய பிளாப் படமாக இருந்தது. சமீபத்தில் இந்தியில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சல்மான்கான் நடித்த சிக்கந்தர் படமும் படுமோசமான தோல்வியை சந்தித்தது. அதனால் மதராஸி படம் குறித்த ஒரு பதட்டத்தில் படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார்.

- Advertisement -

அடுத்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். தொடர்ந்து படப்பிடிப்பு சில தினங்களில் நடத்தப்பட உள்ளது. இந்த படத்தில் தெலுங்கு முன்னணி நடிகை ஸ்ரீலீலா நாயகியாக நடிக்கிறார். அதர்வா முக்கிய கேரக்டரிலும் நடிகர் ரவி மோகன் வில்லன் கேரக்டரிலும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

அமரன் படத்தை போலவே இதுவும் பயோபிக் படம்தான். மொழிப்போர் தியாகி இராசேந்திரன் என்பவரது வாழ்க்கையை மையப்படுத்தி கதையில்தான் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்தி மொழி திணிப்பை எதிர்க்கும் ஒரு கதைக்களத்தில் கல்லூரி மாணவராக சிவகார்த்திகேயன் இதில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்த படத்துக்கு பின் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க உள்ள படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு டைரக்ட் செய்கிறார். இந்த படத்துக்கான ஸ்கிரிப்ட் தயாரிப்பு பணியில் வெங்கட்பிரபு தீவிரமாக இருந்து வருகிறார். இலங்கையில் தனது உதவி இயக்குனர்களுடன் ஸ்டோரி டிஸ்கஷனில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் டைம் டிராவல் கதைக்களத்தில்தான் உருவாகிறது. இந்த படத்தில் நாயகியாக மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இன்னொரு நாயகியாக டிராகன் பட நடிகை கயாடு லோஹரும் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆக சிம்பு பட நாயகியும் டிராகன் பட நடிகையும் என இருவரும்தான் நாயகிகள் என்று தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்