- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சங்க கட்டிடத்துக்கு உதயநிதி ஸ்டாலின் கொடுத்தது கடனா அல்லது நிதியா ? - ...

நடிகர் சங்க கட்டிடத்துக்கு உதயநிதி ஸ்டாலின் கொடுத்தது கடனா அல்லது நிதியா ? – இந்த விஷயத்தில் நடிகர் அஜீத்குமார் நிலைப்பாடு இதுதானோ?

- Advertisement -

தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட துறையின் வளர்ச்சிக்காகவும், திரைப்பட கலைஞர்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காகவும் உருவாக்கப்பட்டது. ஆனால் நலிந்த கலைஞர்களுக்கு, நடிக்க வாய்ப்பில்லாத நடிகர், நடிகைகளுக்கு இந்த சங்கத்தால் எந்தவிதமான பயனும் இல்லை என்ற புகார் இருந்து வருகிறது.

கடந்த 2000ம் ஆண்டில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக கேப்டன் விஜயகாந்த் பதவிக்கு வந்த போது, நடிகர் சங்கம் பல கோடி ரூபாய் கடனில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். நடிகர், நடிகையர் கடனை உதவ முன்வராத நிலையில், சிங்கப்பூர் மற்றும் மலேசியா, துபாய் போன்ற நாடுகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி பல கோடி ரூபாய் திரட்டினார்.

- Advertisement -

அதில் நடிகர் சங்க கடனை அடைத்த கேப்டன், நடிகர் சங்கத்தில் ரூ. 1.70 கோடி ரூபாயை இருப்பும் வைத்தார். ஆனால் அதற்கு பிறகு பொறுப்புக்கு வந்த நடிகர் சங்க நிர்வாகிகள், சங்கத்தின் இருப்பில் இருந்த பணத்தையும் செலவு செய்து விட்டனர். இப்போது நடிகர் சங்க கட்டிடப் பணி அப்படியே பாதியில் நிற்கிறது.

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் 2 கிலோ மீட்டர், 2 கிலோ மீட்டர் என 50 கிலோ மீட்டருக்கு மேல் நடிக்க வைக்கும் ஒரு வடமாநில முதியவர் போல, சங்க கட்டிடம் கட்டி விடுவோம், கட்டி விடுவோம் என்று விஷால் கூறிக்கொண்டே தான் இருக்கிறாரே தவிர, ஒரு செங்கல் கூட இதுவரை அங்கு வந்து சேரவில்லை.

- Advertisement -

இதற்கிடையே 30 டாப் நடிகர் நடிகைகளில் தலா ரூ. 1கோடி வாங்கி, 30 கோடி ரூபாயை வங்கியில் டிபாசிட் செய்து விடலாம். மாதந்தோறும் அந்த வட்டியில், நடிகர் சங்க கட்டிடத்துக்கு வாங்கும் கடனை இஎம்ஐயாக கட்டி விடலாம் என்ற புது யோசனை சொல்லப்பட்டது. ஆனால் யாரும் அதற்கு பணம் கொடுத்ததாக தெரியவில்லை. குறிப்பாக அஜீத்குமார் தரப்பில் இதுகுறித்து சொன்ன போது பதிலே இல்லை.

இப்போது அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஒரு கோடி ரூபாயை, நடிகர் சங்க நிர்வாகிகள் விஷால், கார்த்தி, நாசரிடம் நேரில் அளித்தார். இது அந்த 30 கோடிக்கான ஒரு கோடியா, அல்லது உதயநிதி தனிப்பட்ட முறையில் தந்த வளர்ச்சி நிதியா என்பது தெரியவில்லை. எப்படியிருப்பினும் இதையே முன் உதாரணமாக வைத்து, பெரிய ஸ்டார் நடிகர்களிடம் நடிகர் சங்க நிர்வாகிகள், கடனோ அல்லது நிதியோ திரட்டலாம். ஆனால் வழக்கம் போல், விஷால் குறட்டை விடுவாரா, என்பதுதான் கோலிவுட் சார்ந்தவர்களின் கேள்வியாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்