- Advertisement -
திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. காவல்துறையை கையில் வைத்திருக்கும் டம்மி முதலமைச்சரின் தோல்வியே இதற்கு காரணம். பழிவாங்கவும் பழி போடவும் ஆலாய் பறக்கும் இந்த அரைவேக்காடு ஆட்சியாளர்கள் மக்கள் பலியாவதை எப்போது தடுப்பார்கள்? டம்மி சிஎம் சொன்ன திறமையான அதிகாரிகள் எல்லாம் எங்கே போனார்கள்? அடிக்கடி ரோடுகளில் டாட்டா காட்டும் முதலமைச்சர் விஜய் சட்டம் ஒழுங்குக்கும் ஒரேடியாக டாட்டா காட்டிவிட்டதால் ரவுடிகள் கேஷுவலாக குற்றங்களை செய்துவிட்டு டாட்டா காட்டி தப்பித்து விடுகின்றனர் என்று உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியிருக்கிறார்.





