- Advertisement -
Homeபொழுதுபோக்குகமல் நடிக்கும் அவரது 237வது படம், ஷூட்டிங் எப்போது? இசையமைப்பாளர் அவர்தானா? - லேட்டஸ்ட் தகவல்...

கமல் நடிக்கும் அவரது 237வது படம், ஷூட்டிங் எப்போது? இசையமைப்பாளர் அவர்தானா? – லேட்டஸ்ட் தகவல் வந்தாச்சு…

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் இந்தியன் 2. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்தாண்டில் வெளியான இந்த படம் மிக மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். கமலுடன் பாபி சிம்ஹா சித்தார்த் சமுத்திரக்கனி பிரியா பவானி சங்கர் என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தும் படம் சொதப்பி விட்டது.

இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்ததாக தக்லைஃப் படம் வருகிற ஜூன் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் திரிஷா அபிராமி சிம்பு அசோக் செல்வன் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

தக்லைஃப் படத்தில் இருந்து ஜிங்குச்சா என்ற ஒரு பாடல் வெளியான நிலையில் வருகிற 7ம் தேதி நாளை மறுதினம் மற்றொரு பாடல் வெளியாக உள்ளது. இது மெலோடியான பாடல் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து வருகிற 16ம் தேதி சென்னை நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் தக்லைஃப் படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் வெளியீடு மிக பிரமாண்ட நடத்தப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் அடுத்து நடிக்கும் அவரது 237வது படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் டைரக்ட் செய்கிறார். ஏற்கனவே இந்த படத்துக்கான ஸ்கிரிப்ட் தயாரான நிலையில் கடந்த ஜனவரி மாதமே படப்பிடிப்பை துவங்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் கமல் அரசியல் பணிகளில் தீவிரம் காட்டியதால் படப்பிடிப்பு தாமதமானது.

இந்நிலையில் வருகிற ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதம் துவக்கத்தில் கமல் 237 படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளனர். அதற்குள் வெயிலின் தாக்கமும் குறைந்துவிடும் என்பதும் முக்கியமான விஷயமாக உள்ளது. குறிப்பாக இது சண்டை காட்சிகள் நிறைந்த படம் என்பதால் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தால் தான் படப்பிடிப்பு தாமதமின்றி நடக்கும்.

அத்துடன் இந்த படத்திற்கு இசையமைக்க ஏ ஆர் ரகுமான், அனிருத் மற்றும் மலையாள இசையமைப்பாளர் என 3 பேர் பெயர் அடிபட்டது. இப்போது மலையாள இசையமைப்பாளர் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். மேலும் கமல் நடித்துள்ள தக்லைஃப் படத்துக்கு ஏஆர் ரகுமான் இசை அமைத்துள்ளதால், இந்த கமல் 237 படத்துக்கு அனிருத் இசையமைக்க கமல் வாய்ப்பளிப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்