- Advertisement -
நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவரும் ஆரம்ப காலத்தில் நிறைய படங்களில் இணைந்து நடித்திருந்தனர். ஆனால் அவர் கலந்து பேசி இனி சேர்ந்து நடிப்பதில்லை என முடிவு செய்த நிலையில் 46 ஆண்டுகளாக அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. இப்போது நெல்சன் இயக்கத்தில் அவர்கள் இணையும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படம் ஷூட்டிங் வருகிற டிசம்பரில் துவங்க உள்ளது. 2028ம் ஆண்டில் ஜனவரி அல்லது ஏப்ரல் மாதம் இந்த படம் ரிலீஸ் செய்ய இயக்குனர் நெல்சன் திட்டமிட்டுள்ளார்.





