தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஏஆர் முருகதாஸ். பல சூப்பர் ஹிட் படங்களை தமிழில் தந்திருக்கிறார். குறிப்பாக கஜினி ரமணா ஏழாம் அறிவு கத்தி துப்பாக்கி சர்கார் உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவை. ஏஆர் முருகதாஸ் படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் தனி கவனம் இருந்து வருகிறது.
தமிழில் மட்டுமின்றி இந்தியிலும் ஏஆர் முருகதாஸ் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் சூர்யா நடித்த மாஸ் ஹிட் ஆன கஜினி படத்தை இந்தியில் அமீர்கான் நடிக்க கஜினி என்ற பெயரிலேயே இயக்கி வெற்றி பெற்றார். இந்தியிலும் கஜினிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது.
ஏஆர் முருகதாஸ் இதுவரை இயக்கிய படங்களில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் மட்டுமே சொதப்பியது. ரஜினி என்ற கமர்ஷியல் ஹீரோவுக்காக தன் இயல்பை மாற்றிக்கொண்டு ஏஆர் முருகதாஸ் உருவாக்கிய கதை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் ஏஆர் முருகதாஸ் படங்களில் மிக மோசமான தோல்வியை தழுவிய படம் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம்தான்.
இப்போது இந்தியில் சல்மான் கான் ராஷ்மிகா மந்தனா சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படம் சிக்கந்தர். இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான இந்த படம் நாளை ( 30ம் தேதி) உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்தில் 31 வயது வித்யாசம் என்ற நிலையில் சல்மான்கான் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்திருக்கின்றனர்.
இந்நிலையில் சிக்கந்தர் படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா பேய் கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. வில்லன்களால் கொல்லப்படும் ராஷ்மிகா மந்தனா பல நேரங்களில் ஆவியாக வந்து சல்மான்கானுடன் வந்து பேசுவது பழகுவது போன்ற காட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
கஜினி படத்திலும் இதே போல் அசின் வில்லன்களாக கொல்லப்பட்டு விடுவார். அவரது நினைவுகளுடன் சூர்யா இருப்பது போலவே இந்த படத்தில் சல்மான்கானும் இருப்பதாக படத்தின் கதைக்களம் உருவாகி இருப்பதாக தெரிகிறது. கடைசியில் ராகவா லாரன்ஸ் சுந்தர் சி போல ஏஆர் முருகதாஸூம் பேய்கதை இயக்குனராக மாறிவிட்டாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.





