இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தமிழ் சினிமாவில் உள்ள இளம் இயக்குனர்களில் மிகவும் கவனிக்கப்படுபவராக இருக்கிறார். மாநகரம், கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ என 5 படங்களை மட்டுமே இயக்கி உள்ள அவர், முன்னணி இயக்குனராக உள்ளார்.
இயக்குனராக முதலில் அறிமுகமான மாநகரம் படத்திலேயே பெரிய அளவில் கவனம் பெற்ற லோகேஷ் கனகராஜூக்கு கைதி படம் வேற லெவலில் அமைந்தது. அந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அடுத்து விக்ரம் படமும் லோகேஷ் கனகராஜூக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. ஆனால் விஜய் நடித்த மாஸ்டர், லியோ படங்கள் பெரிய அளவில் இல்லை.
அதிலும் லியோ படத்தை ஆளாளுக்கு வேற லெவலில் இருக்கும் பாராட்டி எதிர்பார்த்த நிலையில், முற்றிலும் சொதப்பலான ஒரு படமாக லியோ அமைந்தது. வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், விமர்சன ரீதியாக லோகேஷ் கனகராஜூக்கு இந்த படம் பலத்த அடியாக இருந்தது.
அதிலும் 2023ம் ஆண்டில் கம்ப்யூட்டர் டிஜிட்டல் யுகத்தில் இரட்டை பிறவி, நரபலி போன்ற விஷயங்களை படத்தில் கொண்டு வந்ததை பார்த்து, லோகேஷ் கனகராஜ் இயக்கிய படத்திலா இப்படி என்று ரசிகர்கள் தலையில் அடித்துக்கொண்டனர். அதனால் லியோ படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது.
இந்நிலையில் தி கோட் படத்தை இயக்கியுள்ள இயக்குனர் வெங்கட் பிரபு, அந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், தி கோட் படத்தில் எந்த யுனிவர்ஸூம் இல்லை. எந்த பழைய விஷயமும் இல்லாத தனி படம்தான். அந்த படத்தை, இந்த படத்தை பார்த்துவிட்டு வாருங்கள் என்றெல்லாம் சொல்ல மாட்டேன், என்று கூறியிருக்கிறார்.
விக்ரம் படம் வெளியான போது, கைதி படம் பார்த்துவிட்டு வாருங்கள் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு கூறியிருந்தார். ஏனெனில் கைதி படத்தின் எல்சியு காட்சிகள், விக்ரம் படத்தில் இடம்பெற்று இருந்தன. அப்படி தி கோட் படத்தில் எந்த எல்சியுவும் இல்லை என்பதை லோகேஷ் கனகராஜை குத்திக் காட்டும் விதமாக, வெங்கட்பிரபு பேசியிருப்பது இப்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.





