விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் திரைப்படம் வெளியாக, இன்னும் ஒரு வாரம் மட்டும் தான் உள்ளது. ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு தற்போது நெருங்கி வருகிறது. அஜித் குமாரை வைத்து மங்காத்தா இன்னும் பிளாக்பஸ்டரை இயக்கிய வெங்கட் பிரபு, இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து இருக்கிறார்.
ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி இந்த திரைப்படத்தை தயாரித்து உள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் என்னும் நிறுவனம் தான் தமிழ்நாடு முழுவதும் இந்த திரைப்படத்தை விநியோகம் செய்கிறது. படம் வெளியாவதற்கு முன்பே, தயாரிப்பு நிறுவனம் கோட் திரைப்படத்தின் மூலம் நல்ல லாபம் பார்த்திருப்பதாக கூறப்படுகிறது.
இதன் ஓடிடி உரிமையை netflix நிறுவனம் பெற்றிருக்கிறது. இதேபோல், சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் வாங்கி இருக்கிறது. பிற மாநிலங்களிலும் இந்த திரைப்படத்தின் விநியோகம் நல்ல தொகைக்கு சென்றிருப்பதால் மீண்டும் தான் வசூல் சக்கரவர்த்தி என்பதை நிரூபித்திருக்கிறார் விஜய்.
இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. படத்தில் அமைக்கப்பட்டுள்ள பாடல்கள் சரியாக இல்லை என்று ரசிகர்கள் கூறி வந்த நிலையில், அவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இந்த படத்தின் டிரைலர் அமைந்தது. இன்னும் ஒரு பாடல் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
அதற்கு த்ரிஷா நடனமாடி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது போக மறைந்த நடிகர் விஜயகாந்தையும், ஏ ஐ தொழில் நுட்பத்தின் மூலம் படக்குழுவினர் பயன்படுத்தி இருக்கிறார்கள். இப்படி ஏராளமான ஆச்சரியங்கள் கோட் திரைப்படத்தில் இருக்கின்றன. இதனிடையே, படம் குறித்த பல்வேறு தகவல்களை வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார்.
காந்தி என்னும் கதாபாத்திரத்தில் ஒரு பகுதி தான் இந்த திரைப்படம். நிச்சயம் இந்த படத்தின் அடுத்த காட்சிகளை உங்களால் யூகிக்கவே முடியாது. டிரைலரில் நான் பொதுவாக சொல்லிவிட்டாலும், அதனை யாரும் டிகோட் செய்யவில்லை. மங்கத்தா திரைப்படத்தில் இருப்பது அனைவருமே கெட்டவர்களாக தான் இருப்பார்கள். ஆனால் இதில் அப்படி அல்ல காந்தி என்பவருக்கு ஒரு குடும்பம் இருக்கிறது என்று வெங்கட் பிரபு பேசியுள்ளார்.





