- Advertisement -
Homeபொழுதுபோக்குமங்காத்தா 2 திரைப்படம் குறித்து சூப்பர் அப்டேட் வெளியிட்ட வெங்கட் பிரபு... இது மட்டும் இருந்தால்...

மங்காத்தா 2 திரைப்படம் குறித்து சூப்பர் அப்டேட் வெளியிட்ட வெங்கட் பிரபு… இது மட்டும் இருந்தால் திரையரங்குகளில் திருவிழா நடக்குமே…

- Advertisement -

நடிகராக இருந்து பின்னர் இயக்குனராக மாறியவர் வெங்கட் பிரபு. ஆரம்ப காலத்தில் திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் மட்டுமே அவர் நடித்து வந்தார். ஜி திரைப்படத்தில் அஜித் குமாருடனும், சிவகாசி திரைப்படத்தில் விஜய்யுடனும் வெங்கட் பிரபு நடித்திருப்பார்.

 

- Advertisement -

இப்படியான சூழலில்தான் நடிப்பை கைவிட்டு இயக்கத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் வெங்கட் பிரபு. இந்த முடிவு தான் அவர் இன்று, திரையுலகில் உச்சத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம். தனது முதல் திரைப்படம் ஆன சென்னை 600028-ல் தான் யார் என்பதை நிரூபித்து காட்டினார் வெங்கட் பிரபு.

 

- Advertisement -

தனக்கென ஒரு வட்டாரத்தை வைத்துக்கொண்டு, அந்தக் குழுவின் உடனே அவர் பயணிக்க ஆரம்பித்தார். சரோஜா கோவா ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிறகு அவருக்கு அஜித்தின் 50 ஆவது படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டார் வெங்கட் பிரபு.

 

அஜித்தின் திரை உலக பயணத்திலும், வெங்கட் பிரபுவின் இயக்க வாழ்க்கையிலும் மிக முக்கியமான திரைப்படமாக மங்காத்தா அமைந்தது. இப்போது வரை அஜித் ரசிகர்கள் அந்த திரைப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சி, சஸ்பென்ஸ் கலந்த கொண்டாட்டமாக அமைய அங்கிருந்து வெங்கட் பிரபு தன் டாப் கியருக்கு சென்றார்.

 

இதனைத் தொடர்ந்து பிரியாணி, மாஸ் என்ற மாசிலாமணி உள்ளிட்ட படங்களை இயக்கினார். இதில் சென்னை 600028 திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெற்றி பெற்றது. தொடர்ந்து அவர் இயக்கிய மாநாடு திரைப்படம், மீண்டும் வெங்கட் பிரபு யார் என்பதை நிரூபிக்க செய்தது. இப்படியான சூழலில்தான் விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கியிருக்கிறார் வெங்கட் பிரபு.

 

வரும் ஐந்தாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் அந்த திரைப்படம் குறித்த பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்திருக்கிறார். அப்போது அஜித்குமாருடன் நடந்த சந்திப்பு குறித்தும் அவர் பேசியிருக்கிறார். அஜர்பைஜானில் அவரை சந்தித்தேன். ஒரு இரண்டு மூன்று நாட்கள் அங்கு தங்கி இருந்தேன். நாங்கள் நிறைய விஷயங்களை பேசிக்கொண்டோம். மங்காத்தா 2 நிச்சயம் அவரை வைத்து தான் எடுக்க முடியும். நான் அஜித் விஜய் என இருவரையும் ஒன்றாக இணைத்து படம் எடுக்க ஆசைப்படுகிறேன் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும் என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்