- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யாவைத் தொடர்ந்து உடனடியாக தனுஷுடன் இணையும் பிரபல இயக்குனர்... இன்னும் எத்தனை திரைப்படங்களைதான் தனுஷ் லைன்...

சூர்யாவைத் தொடர்ந்து உடனடியாக தனுஷுடன் இணையும் பிரபல இயக்குனர்… இன்னும் எத்தனை திரைப்படங்களைதான் தனுஷ் லைன் அப்பில் வைத்திருக்கிறார் என ஆச்சரியப்படும் ரசிகர்கள்…

- Advertisement -

தனுஷ் தற்போது குபேரா திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நாகர்ஜூனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோருக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை மையமாக வைத்து இந்த திரைப்பட எடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இந்த திரைப்படத்திலிருந்து ட்ரெய்லர் வெளியானது. அதில் தனுஷ் குரலில் எனது எனது எனத் தொடங்கும் பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தனுஷ் பிச்சைக்காரனாக படத்தில் நடித்திருக்கிறார். அதேசமயம் பணத்தை மையப்படுத்தி இந்த திரைப்படத்தின் கதை எழுதப்பட்டிருப்பது அதன் முன்னோட்டத்தை பார்க்கும் போதே நன்றாக தெரிந்தது.

- Advertisement -

வரும் இருபதாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் அதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பட குழு தீவிரம் காட்டி வருகிறது. இதனைத் தொடர்ந்து, ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஒரு பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இதற்கான பணிகளும் வேகம் எடுத்துள்ளன.

இதனைத் தொடர்ந்து தனுஷின் அடுத்தடுத்த திரைப்படங்களின் பட்டியல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இதில் போர் தொழில் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் உடன் தனுஷ் இணைய இருப்பது உறுதியாகி இருக்கிறது. வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார். மமீதா பைஜூ படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

- Advertisement -

இதுபோக அமரன் திரைப்படத்தை எடுத்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் நடிக்கிறார் தனுஷ். அமரனைப் போலவே இதுவும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. மாரி செல்வராஜ் இயக்கத்திலும் தனுஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது. பிரம்மாண்டமாக எடுக்க இருக்கும் இந்த திரைப்படத்தையும் ஐசரி கணேஷ் தான் தயாரிக்கிறார்.

இப்படியான சூழலில், தெலுங்கு இயக்குனர் வெங்கி அல்லூரியுடன் மீண்டும் தனுஷ் இணைந்து பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த கூட்டணி இணைந்து வாத்தி திரைப்படத்தை கொடுத்தது. இது கலவையான விமர்சனத்தையே பெற்றது. தற்போது வெங்கி அட்லூரி சூர்யாவை வைத்து ஒரு படத்தை எடுத்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அவர் தனுசை வைத்து படம் எடுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்