- Advertisement -
Homeபொழுதுபோக்குபெரும் தள்ளாட்டத்தில் தமிழ் சினிமா, தடுமாற்றத்தில் தயாரிப்பு நிறுவனங்கள் - கோடிகளை வாரி வாரி குவிக்கும்...

பெரும் தள்ளாட்டத்தில் தமிழ் சினிமா, தடுமாற்றத்தில் தயாரிப்பு நிறுவனங்கள் – கோடிகளை வாரி வாரி குவிக்கும் ஸ்டார் நடிகர்கள்

- Advertisement -

தமிழ் சினிமாவை பொருத்த வரை அடிக்கடி ஸ்டார் நடிகர்களின் படங்கள் வெளியாகிறது. நூற்றுக்கணக்கான கோடிகளில் வசூலை குவிக்கிறது. தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் தமிழ் சினிமா மிகப்பெரிய வளர்ச்சி பாதையில் போய்க்கொண்டு இருப்பதாக தான் ரசிகர்களின் பார்வையில் தெரிகிறது.

ஆனால் உண்மை நிலவரம் அதுவல்ல. தமிழ் சினிமா மிகப்பெரிய முடக்கத்தில் இருந்து வருகிறது. ரஜினி, கமல், விஜய், அஜீத், தனுஷ் என மிகப்பெரிய நடிகர்கள், முன்னணி நடிகர்கள் மட்டுமே பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். மற்றபடி சின்ன பட்ஜெட் படங்களோ, புதிய நடிகர்களோ அதிகமாக நடிக்கும் படங்கள் தயாரிப்பு எதுவும் இப்போது நடப்பது இல்லை.

- Advertisement -

அதாவது தமிழ் சினிமாவில் படங்களின் உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது. வழக்கமாக நடக்கும் படப்பிடிப்புகளில் 30 சதவீத படப்பிடிப்புகள் மட்டுமே இப்போது நடந்து வருகின்றன. சினிமா சார்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள், தொழிலாளர்கள், துணை நடிகர்கள் என 30 நாட்களும் பிஸியாக இருந்தவர்கள், இப்போது மாதத்தில் 10 நாட்கள் வேலை இருந்தாலே பெரிய விஷயம் என்று நினைக்கும் அளவுக்கு நிலமை தலைகீழாக மாறி இருக்கிறது.

அதாவது பெரிய நடிகர்கள் படங்கள்தான் தயாரிக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகிறதே தவிர, மற்றபடி தமிழில் படங்கள் உருவாவது வெகுவாக சமீபமாக குறைந்து வருகிறது. பிறமொழி படங்கள், ரீமேக் படங்கள், பான் இந்தியா படங்களின் வருகை அதிகரித்துள்ளதால், தமிழ் படங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது, சினிமா ரசிகர்களுக்கு தெரியவில்லை.

- Advertisement -

ஆனால் தமிழ் சினிமா நிலமை இவ்வளவு மோசமாக இருந்தும், நடிகர்களுக்கு இது தெரிந்தும், தெரியாதது போல காட்டிக்கொண்டு தங்களது சம்பளத்தை நூற்றுக்கணக்கான கோடிகளில் வாங்கி குவிக்கின்றனர். குறிப்பாக தனுஷ் சம்பளத்தை 50 கோடியாக உயர்த்தியிருக்கிறார். துருவ நட்சத்திரம், தங்கலான் படங்கள் வராத நிலையில், பல ஆண்டுகளாக வெற்றிப் படங்களே தராத சியான் விக்ரம் தனது சம்பளத்தை ரூ. 60 கோடியாக உயர்த்தியிருக்கிறார்.

பெரிய நடிகர்கள் கால்ஷீட், பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், பெரிய பட்ஜெட் படங்களே எடுக்கப்படுகின்றன. அவைகளே தியேட்டர்களையும் ஆக்கிரமித்து கொள்கின்றன. அதனால் சின்ன பட்ஜெட் படங்களோ, கதையை மையப்படுத்திய நல்ல படங்களோ, 2ம் நிலை, 3ம் நிலையில் இருக்கும் சின்ன நடிகர்களோ, இயக்குநர்களோ படம் பண்ண முடியாமல் முடங்கி கிடப்பதால், தமிழ் சினிமாவில் படம் தயாரிப்பு தள்ளாடி வருகிறது. இது மிகப்பெரிய பின்னடைவை, சரிவை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியுள்ளதாக தயாரிப்பாளர்கள் புலம்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்