- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷ் இயக்குரானது குறித்து டைரக்டர் வெற்றிமாறன் சொன்ன தகவல், இப்படி பேசியிருக்கிறாரே? - வடசென்னை 2...

தனுஷ் இயக்குரானது குறித்து டைரக்டர் வெற்றிமாறன் சொன்ன தகவல், இப்படி பேசியிருக்கிறாரே? – வடசென்னை 2 போல் ராயன் இருந்ததால் வந்த கோபமா?

- Advertisement -

நடிகர் தனுஷ் சினிமா பயணத்தில் மிக முக்கியமான ஒரு படமாக அமைந்தது பொல்லாதவன். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய முதல் படம். பைக்கை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக தனுஷூக்கு ஆக்‌ஷன் ஹீரோவாக நல்ல அடையாளத்தை கொடுத்தது.

தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய படங்களில் தனுஷ் நடித்திருந்தார். இந்த 3 படங்களுமே பெரிய அளவில் வெற்றிப் படங்களாக இருந்தன. வெற்றிமாறனின் ஆஸ்தான ஹீரோவாக தனுஷ் மாறிய நிலையில், வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்க மறுத்தால் அதில் தனுஷ்தான் நடிப்பார் என்றும் கூறப்பட்டது.

- Advertisement -

பல ஆண்டுகளுக்கு முன் ராஜ்கிரண், ரேவதி நடித்த ப பாண்டி என்ற படத்தை தனுஷ் டைரக்ட் செய்திருந்தார். இந்த படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து இப்போது ராயன் என்ற படத்தை தனுஷ் இயக்கி நடித்திருந்தார். இது தனுஷின் 50வது படம். இதுவரை ரூ. 150 கோடியை வசூலில் கடந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தை பலரும் வடசென்னை 2 என கூறி வருகின்றனர்.

இதுமட்டுமின்றி தனது சகோதரி மகன் ஹீரோவாக நடிக்கும் காதல், காமெடி கொண்ட ஒரு ஜாலியான படத்தையும் நடிகர் தனுஷ் டைரக்ட் செய்துள்ளார். அடுத்தகட்டமாக இந்த படமும் வெளியாக இருக்கிறது. ராயன் படம் தந்த வெற்றியை தொடர்ந்து இன்னும் ஒரு படம் இயக்கும் திட்டத்தில் தனுஷ் இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் தனுஷ் இயக்குனரானது குறித்து கூறியதாவது, தனுஷ் டைரக்டரானது ஒரு இயல்பான முன்னேற்றம் என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர் இயக்குனர்களை சுற்றி வளர்ந்தவர். அவரது அப்பா கஸ்தூரிராஜா ஒரு இயக்குனர். அண்ணன் செல்வராகவன் ஒரு இயக்குனர்.

தனுஷூக்கும் வேகமாக கற்றுக்கொள்ளும் புத்திச்சாலித்தனம் உள்ளது.அதனால் அவர் இயக்குனராக மாறுவது மிகவும் இயல்பானது என்று நான் நினைக்கிறேன். ராயன் படத்தை மிக அருமையாக இயக்கி தனுஷ் நடித்துள்ளார் என்று அந்த நேர்காணலில் இயக்குனர் வெற்றிமாறன் கூறியிருக்கிறார். இருந்தாலும் வடசென்னை 2 படம் போல ராயன் இருப்பதாகவும் ரசிகர்கள் கூறிவருவதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்