- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது வெற்றிமாறனுடன் இணைகிறாரா அஜித்?.. நடந்தா நல்லா இருக்கும் ஆனா நடக்குமா?

என்னது வெற்றிமாறனுடன் இணைகிறாரா அஜித்?.. நடந்தா நல்லா இருக்கும் ஆனா நடக்குமா?

- Advertisement -

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த துணிவு படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸானது. இதற்கு முன்னதாக அவர்கள் இணைந்த நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய இரண்டு படங்களும் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து துணிவு படத்தை எப்படியாவது வெற்றி படமாக கொடுக்க வேண்டுமென்ற முனைப்புடன் பணியாற்றி அந்தப் படத்தை வெற்றி பெறவும் செய்தனர்.

எப்போதும் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே தனது அடுத்த பட அறிவிப்பை அஜித் வெளியிடமாட்டார். ஆனால் தனது 62ஆவது படத்தின் அறிவிப்பை அப்படி வெளியிட சம்மதித்தார். முதலில் அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. திடீரென வெளியேறினார். அவரைத் தொடர்ந்து மகிழ் திருமேனி உள்ளே வந்தார்.

அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து ஷூட்டிங் இப்போ தொடங்கும் அப்போ தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் பல மாதங்கள் எந்த அப்டேட்டும் வரவில்லை. தற்போது அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இஸ்ரேல் – பாலஸ்தீன போரின் தாக்கம் அஜர்பைஜானில் எதிரொலிக்கும் என்பதால் விடாமுயற்சி ஷூட்டிங்கிற்கு ஏதும் சிக்கல் வந்துவிடுமோ என்ற ஒரு கேள்வியும் எழுந்திருக்கிறது. இருந்தாலும் படத்தை விரைவில் முடிக்கவே மகிழ் திருமேனி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்தப் படத்தில் த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்கலாம் என ஒரு தகவல் வெளியானது.

இந்த சூழலில் அஜித்தின் 63ஆவது படத்தை யார் இயக்குவார் என்று கேள்வி உருவானது. அந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவார் என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது. மார்க் ஆண்டனி கொடுத்த ஹிட் அவரை நோக்கி பலரது பார்வையை திருப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவரை அஜித் பயன்படுத்துவார் என்றும் திரைத்துறையில் ஒருதரப்பினர் பேசினர். இருந்தாலும் அதில் எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை.

இந்நிலையில் அஜித்தின் 64ஆவது படத்தை இயக்குபவர் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி வெற்றிமாறன் இயக்குவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது நடக்க 100 சதவீதம் வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. ஏனெனில் வெற்றி அடுத்ததாக விடுதலை 2, வடசென்னை 2, வாடிவாசல் என பிஸியான் லைன் அப்பில் இருக்கிறார். அதேபோல் விஜய்யுடன் இணைவதும் உறுதியாகியிருப்பதாக ஒரு தகவல் உலாவுவதால் கண்டிப்பாக அஜித்துடன் வெற்றி இணையமாட்டார். மீறி இணைந்தால் சூப்பராக இருக்குமே என ஏகே ரசிகர்கள் கூறுகின்றனர்.

சற்று முன்