- Advertisement -
Homeபொழுதுபோக்குவெற்றிமாறனை அப்படி அழைத்த இளையராஜா, பதிலுக்கு அப்படியே அவரை அழைத்துப் பேசிய வெற்றிமாறன் - இசைஞானியை...

வெற்றிமாறனை அப்படி அழைத்த இளையராஜா, பதிலுக்கு அப்படியே அவரை அழைத்துப் பேசிய வெற்றிமாறன் – இசைஞானியை பார்த்து இப்படி பயப்படாம பேசிட்டாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் சாதித்த ஜாம்பவான்களாக பலர் இருந்தனர், இப்போதும் இருக்கின்றனர். அந்த வகையில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், தமிழ் சினிமாவில் மிகவும் மரியாதைக்குரியவர். சின்னவர், வாத்தியார் என்றுதான் அவரை குறிப்பிட்டுச் சொல்வார்கள். எம்ஜிஆர் என யாரும் அவரது காதுபட பெயர் சொல்லி அழைக்க மாட்டார்கள். விதிவிலக்காக, நடிகை பானுமதி மட்டுமே மிஸ்டர் ராமச்சந்திரன் என்று எம்ஜிஆரை அழைப்பது வழக்கம்.

அதே போல், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் மிகப்பெரிய சாதனையாளராக, நடிப்பு பல்கலை கழகமாக போற்றப்படுபவர். செவாலியே, தாதா சாகிப் பால்கே போன்ற உயர்ந்த விருதுகளை பெற்றவர். அவரை பெரியவர் என்றும், ஐயா என்றும், அவரது வயது ஒத்தவர்கள், நடிகர் திலகம் என்றும்தான் குறிப்பிடுவது வழக்கம்.

அதுபோல் இசைஞானி இளையராஜா, இன்றைய தமிழ் சினிமாவில் சீனியர் இசையமைப்பாளராக இருக்கிறார். அவரை யாரும் இளையராஜா என்று அவரது முன்னிலையில் குறிப்பிடுவது இல்லை. இசைஞானி என்றுதான் சொல்வது வழக்கம். மற்றபடி நேரில் அவரிடம் பேசும் போது அவரை சார் என்றோ, ஐயா என்றோ தான் அழைக்கின்றனர். ரஜினிகாந்த், இளையராஜாவை ஸ்வாமி என்றுதான் அழைக்கிறார்.

இப்படி மரியாதைக்குரிய, மதிப்புமிகு மனிதர்களை அவர்களது பெயர்களை சொல்லி அழைக்காமல், மரியாதைக்குரிய வார்த்தைகளில் அழைப்பது வழக்கம். ஆனால், அவர்களே ஒரு சிலரிடம் நெருங்கிப் பழகும்போது தங்களது உயர்ந்த இடத்தை எல்லாம் மறந்துவிட்டு, மிக சகஜமாகி உறவாட துவங்கி விடுகின்றனர். அப்போது சராசரி மனநிலையில், அன்பு காட்டி அரவணைக்கின்றனர்.

அந்த வகையில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை மற்றும் விடுதலை 2 படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். அவ்வப்போது போனில் வெற்றிமாறனை தொடர்பு கொண்டு இளையராஜா பேசியும் வருகிறார். அந்த வகையில் அடிக்கடி நேரில் சந்திப்பதும், போனில் உறவாடுவதும் அவர்களுக்குள் நல்ல நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வெற்றிமாறனுக்கு அடிக்கடி போன் செய்யும் இளையராஜா, தோழர் எங்க இருக்கறீங்க, என்று கேட்டு இருக்கிறார். தோழர் என்ன பண்றீங்க என்றும் நட்பாய் உறவாடி இருக்கிறார். ஒரு கட்டத்தில், தோழர் தோழர் என அழைக்கும் இளையராஜாவை சார் என எப்படி அழைப்பது என சங்கோஜப்பட்ட வெற்றிமாறன், அவரும் பதிலுக்கு சொல்லுங்க தோழர், ஆமாங்க தோழர் என்றே இளையராஜாவிடம் பேச ஆரம்பித்திருக்கிறார். இதற்கு சற்றும் கோபப்படாத இளையராஜா, அதே போல் தொடர்ந்து பேசி இப்போது இருவருமே தோழர்களாக சம்பாஷனை செய்து வருகின்றனர். இசைஞானி இளையராஜாவா இப்படி என தமிழ் சினிமாவினர் வியந்து போய்விட்டனர்.

சற்று முன்