- Advertisement -
Homeபொழுதுபோக்குவேட்டையன் திரைப்படத்தின் தமிழ்நாட்டு ரிலீஸ் உரிமையை கைப்பற்றியது பிரபல நிறுவனம்... ஆட்டத்தை ஆரம்பிக்கும் ரஜினி ரசிகர்கள்...

வேட்டையன் திரைப்படத்தின் தமிழ்நாட்டு ரிலீஸ் உரிமையை கைப்பற்றியது பிரபல நிறுவனம்… ஆட்டத்தை ஆரம்பிக்கும் ரஜினி ரசிகர்கள்…

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்துக்கு நடப்பாண்டிலேயே இரண்டாவது திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் திரைப்படம் வெளியானது. இதை அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார். கிரிக்கெட் மற்றும் பல பிரச்சினை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.

 

- Advertisement -

விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், போதிய வரவேற்பை பெறவில்லை. ஏற்கனவே படத்தின் சில காட்சிகள் அடங்கிய டிஸ்க் காணாமல் போய்விட்டதாக சர்ச்சை எழுந்த சூழலில், மீதம் இருக்கும் படமும் நன்றாக இல்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

 

- Advertisement -

இன்னும் இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகாமல் இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் இரண்டாவதாக நடித்திருக்கும் வேட்டையன் திரைப்படம் ரிலஸிற்க்கு தயாராகி உள்ளது. வரும் பத்தாம் தேதி இந்த திரைப்படம் வெளியாவதாக தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்தது.

 

இதில், ஜெயிலர் திரைப்படத்தின் பார்முலாவையே பயன்படுத்தி இருக்கிறார்கள். அதாவது அந்தப் படத்தில் ரஜினிகாந்தை தவிர கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் மலையாள நடிகர் மோகன்லால் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அதேபோல் இந்த திரைப்படத்திலும் அமிதாப்பச்சன், பகத் பாஸில் ராணா மஞ்சுவாரியர் உள்ளிட்டோர் வருகிறார்கள்.

 

இதில் மஞ்சுவாரியார் தாரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் ரஜினிகாந்த்துக்கு மனைவியாக நடித்திருக்கிறார். இதுபோக துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் உள்ளிட்டோரும் படத்தில் நடித்திருக்கிறார்கள். காவல்துறையினர் நடத்தும் என்கவுண்டர் மையப்படுத்தி தான் இந்த திரைப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது.

 

அதாவது ரஜினிகாந்த் என்கவுண்டர் ஆதரிக்கும் அதிகாரியாகவும், அதனை அமிதாப்பச்சன் எதிர்ப்பது போன்றும் காட்சிகள் இடம் பெற்றிருப்பது அதன் டீசரை பார்க்கும் போதே தெரிந்தது. ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இந்த படத்தை இயக்கி இருப்பது அதன் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது. இந்த நிலையில் வேட்டையன் திரைப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகி உள்ளது.

 

- Advertisement -

சற்று முன்